Categories
தலைப்புச்செய்திகள்

ஏப்.,7க்குள் கொரோனா இல்லாத மாநிலமா மாறும் தெலுங்கானா; ராவ் நம்பிக்கை

ஐதராபாத்: வரும் ஏப்.,7ம் தேதிக்குள் கொரோனா இல்லாத மாநிலமாக தெலுங்கானா இருக்கும் என அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.ஐதராபாத்தில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது: மாநிலத்தில் 70 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. குணமடைந்தவர்களை இன்று (மார்ச் 30) ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்படுவர். சிகிச்சையில் உள்ள 58 பேர் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவர். வெளிநாடுகளில் இருந்து வந்த 25,937 பேர் தனிமைப்படுத்தப்பட்டு அரசின் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். இவர்கள் அனைவரின் […]

Categories
தலைப்புச்செய்திகள்

உண்டியலில் சேமித்த மொத்த பணத்தையும் கொரோனா நிதிக்கு அளித்த திருச்சி சிறுமி..! குவியும் வாழ்த்துக்கள்.!

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸ் எதிர்ப்பு பணிகளுக்காக பிரதமர் மோடி நிதி உதவி செய்யுமாறு மக்களிடம் கேட்டுக்கொண்டார். பிரதமர் கேட்டுக்கொண்டதை அடுத்து பல்வேறு நிறுவனங்களும், பிரபலங்களும் நிதி வழங்கிவருகின்றனர். இந்நிலையில், பிரதமரின் வேண்டுகோளை கேள்விப்பட்ட […]

Categories
தலைப்புச்செய்திகள்

இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் கொரோனாவின் பாதிப்பு குறைவு..: அமைச்சர் கருப்பணன் பேட்டி

ஈரோடு: இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் கொரோனாவின் பாதிப்பு குறைவாக உள்ளது என்று ஈரோடு மாவட்டம் பவானியில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் பேட்டி அளித்துள்ளார். தற்போதைய நிலையில் கொரோனா நிவாரண நிதி ரூ.1,000 போதுமானது என அவர் தெரிவித்துள்ளார்.

Categories
தலைப்புச்செய்திகள் வணிகம்

முகேஷ் அம்பானியின் ஜியோவில் 10% பங்குகளை பேஸ்புக் வாங்குகிறதா.. உண்மை என்ன.. !

உலக பில்லியனர்களில் ஒருவரான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், இந்திய டிஜிட்டல் சந்தையில் ஜியோவினை விரிவாக்கம் செய்ய அதன் 10% பங்கினை விற்பனை செய்ய உள்ளதாக செய்திகள் உள்ளன. சமூக வலைதளத்தின் ஜாம்பவான் ஆன பேஸ்புக் நிறுவனம், ரிலையன்ஸ் ஜியோவின் 10% பங்கினை வங்கப் போவதாக பைனான்சியல் டைம்ஸில் வெளியான ஒரு அறிக்கையின் படி தெரிய வந்துள்ளது. ஏற்கனவே எண்ணெய் சுத்திகரிப்பு வர்த்தகத்தில் சவுதி அராம்கோவுடன் கைகோர்த்துள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், தற்போது பேஸ்புக் மற்றும் கூகுளுடன் பேச்சுவார்த்தை […]

Categories
தலைப்புச்செய்திகள் வணிகம்

அரசு அனுமதி உண்டு.. ஆனாலும் அத்தியாவசிய பொருட்கள் டெலிவரியில் நீடிக்கும் பிரச்சனை.. என்ன செய்வது!

நாடு முழுவதிலும் நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், கடந்த சில தினங்கள் முதல் கொண்டு இந்தியா முழுவதும் 21 நாள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மக்கள் அதிகமாக கூடும் இடங்கள், மக்கள் யாரும் முக்கியமான அத்தியாவசிய தேவை தவிர, அத்தியாவசிய தேவை தவிர யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆன்லைன் சில்லறை வர்த்தக நிறுவனங்களான அமேசான், பிளிப்கார்ட், ஸ்விக்கி, […]

Categories
தலைப்புச்செய்திகள் வணிகம்

ஏப்ரல் 1ஆம் தேதி வங்கி இணைப்பு.. கொரோனா-வை ஒரு தடையில்லை..!

இந்திய ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் ஏற்கனவே திட்டமிட்டபடி நாட்டில் உள்ள 10 பொதுத்துறை வங்கிகளை 4 வங்கிகளாக மாற்றும் திட்டம் ஏப்ரல் 1 முதல் துவங்கும் என ரிசர்வ் வங்கி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதித்துள்ள இந்த நேரத்தில் வங்கி இணைப்புத் திட்டம் தள்ளிப்போடப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஏப்ரல் 1ஆம் தேதி நடக்க உள்ளது. அரசு அனுமதி உண்டு.. ஆனாலும் அத்தியாவசிய பொருட்கள் டெலிவரியில் நீடிக்கும் பிரச்சனை.. என்ன செய்வது! மேலும் […]

Categories
Featured தலைப்புச்செய்திகள்

கொரோனாவைவிட உள்ளூர்காரர்களால்தான் பயமே..! -மகாராஷ்டிராவில் தவிக்கும் 300 தமிழக இளைஞர்கள்

இது தொடர்பாக தேனி மாவட்டம் ஆண்டிபட்டியைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம் எனும் இளைஞர் நம்மிடையே பேசும் போது, “நாங்கள் மொத்தம் 300 பேர் இங்கே இருக்கிறோம். தேனியைச் சேர்ந்த 20 பேர் இருக்கிறோம். இதேபோல, அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் இங்கே உள்ளனர். டெல்லியை தலைமையிடமாகக் கொண்ட இயற்கைப் பொருள்களை விற்பனை செய்யும் நிறுவனத்திற்காக, மகாராஷ்டிராவில் வேலை செய்ய வந்தோம். நாங்கள் வந்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகிறது. கொரோனா அச்சம் காரணமாக, 144 தடை உத்தரவு இங்கே […]

Categories
Featured தலைப்புச்செய்திகள்

மதுபானத் தடையால் கேரளாவில் 9 பேர் உயிரிழப்பு: கொரோனா பாதிப்பைவிட அதிகம்

கேரளாவில் ஊரடங்கு உத்தரவின் காரணமாக மதுபானங்கள் கிடைக்காததால் 9 பேர் உயிரிழந்துள்ளனர். அதில், 7 பேர் தற்கொலை செய்துள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவல் கிடைத்துள்ளது. கொரோனாவைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து, நாடு முழுவதும் மதுக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. அதனால், குடிக்கு அடிமையானவர்கள் கடும் அவதிப்பட்டுவருகின்றனர். 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 100 மணி நேரம்தான் கடந்துள்ளது. ஆனால், இந்த 10 மணி நேரத்துக்குள்ளாக மதுபானம் கிடைக்காததன் காரணமாக […]

Categories
Featured தலைப்புச்செய்திகள்

நிர்கதியாகத் தவித்த மாற்றுத்திறனாளி கர்ப்பிணி! வளைகாப்பு நடத்தி நெகிழவைத்த புதுக்கோட்டை இளைஞர்கள்

புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் 35 வயது இருக்கும் பார்வைக்குறைபாடு உடைய மாற்றுத்திறனாளி பெண் நிறைமாத கர்ப்பிணியாக நீண்ட நேரமாக ஒரே இடத்தில் அமர்ந்து இருக்க, சாப்பாடு தண்ணீரின்றி இருப்பதைப் பார்த்த ஆட்டோ ஓட்டுநர் அந்தப் பெண்ணிடம் விசாரிக்கிறார். முதலில் பேசத் தயங்கியவர், சிறிது நேரம் கழித்து, “இங்குள்ள பார்வையற்றோர் பள்ளிக்கு என்னை அழைத்துச் செல்ல முடியுமா” என்று கேட்க, உடனே தனது ஆட்டோவில் அங்கு அழைத்துச் சென்றுவிடுகிறார். அங்கிருந்தவர்களிடம் தன் நிலை குறித்துக் கூற, பள்ளி நிர்வாகத்தினர், […]

Categories
Featured தலைப்புச்செய்திகள்

`தனிமையில் இருப்பது எளிதல்ல. ஆனால்!’ – கொரோனாவில் இருந்து மீண்ட ட்ரூடோ மனைவி வேண்டுகோள்

உலகளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் தொற்றால் கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ மனைவி சோபி கிரகோயர் ட்ரூடோ பாதிக்கப்பட்டிருந்தார். மார்ச் 12-ம் தேதி பிரதமர் அலுவலகம் இதனை அறிவித்தது. லண்டன் பயணம் முடித்து திரும்பிய நிலையில் அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அதற்கான சிகிச்சை எடுத்துக்கொண்டார். கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அவர் குழந்தைகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதற்காக அறிகுறிகள் எதுவும் இல்லை. இருந்தும் அவர்கள் […]