ஜப்பானியர்கள் உடல் உறவு கொள்ளாததால் சீர் குலையும் japan பொருளாதாரம்..!

“கடைசியாக வெளிநாட்டில் இருந்து பணியாட்களை வேலைக்கு அமர்த்தப் தொடங்கிவிட்டது”, “இந்த நாட்டின் மக்கள் தொகை வேறு எந்த நாடுகளை விடவும் வேகமாக சரிந்து வருகிறது” இப்படி பல்வேறு சர்வதேச பத்திரிகைகளில் பேசப்பட்டு வரும் நாடு நம் சோனி, டொயோட்டா, சாஃப்ட் பேங்க், சுஸிகி போன்ற நிறுவனங்களின் தாயகமாக japan.

ஆம். ஜப்பானுக்கு எப்படி ஒரு சர்வதேச தொழில் முகம் இருக்கிறதோ அதே போல், பார்ன் தொழில்களுக்கும் என்று ஒரு சர்வதேச முகம் இருக்கிறது. ஜப்பானின் பார்ன் கலாச்சாரத்தின் வெளிப்பாடு தான் ஹென்டாய் (Hentai) என்று சொல்லப்படுகிற ஃபேன்டஸி பார்ன் வீடியோக்கள், நிர்வாணமாக உணவை பரிமாறும் ஹோட்டல்கள் என்று பல வற்றைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

இப்படி ஒரு பக்கம் பார்னை ஒரு துறையாகப் பார்த்து வளர்த்த ஜப்பானில் இன்று உடல் உறவுக்கான அவசியத்தை மறந்து, எனக்கு உடல் உறவு தேவை இல்லை என அந்த நாட்டின் பெரும்பாலான இளைஞர்கள் (ஆண் பெண் இருபாலரும்) சொல்கிறார்கள். அதற்கான காரணங்களைப் பார்ப்போமே.

ano matsui, அனொ மத்ஸுயி, japan, 26 வயது இளைஞர். “நான் முதன் முதலில் ஒரு பெண்ணிடம் பேசி வெளியே அழைத்த போது அவள் மறுத்துவிட்டாள். அதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை, அந்த ஒரு விஷயம் என்னைப் பெரிய அளவில் பாதித்திருக்கிறது. அதனால் எனக்கு பெண்களிடம் பேசுவதற்கான தன் நம்பிக்கை பெரிய அளவில் குறைந்துவிட்டது, அதை மீண்டும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று கூட தோன்றவில்லை. விட்டு விடுங்களேன்”

சரி தனி மனிதர் தான் இப்படி இருக்கிறார் என்றால்… ஜப்பானில் தற்போது 18 வயது முதல் 35 வயதுக்குள் இருக்கும் இளம் வயது ஆண் பெண்களில் 43 சதவிகிதத்தினர் தங்கள் வாழ் நாளில் ஒரு முறை கூட உடல் உறவு வைத்துக் கொண்டதில்லை என்று திடுக்கிடும் தகவலைச் சொல்கிறார்கள்.

Related Post

சரி வயதானால் கலயாணம் செய்து உறவு வைத்துக் கொள்வார்கள் போல என்று நினைத்தால் அதுவும் இல்லை. அதே 18 முதல் 35 வயதுக்குள்ளான ஆண் மற்றும் பெண்களிடம் ஏதாவது உறவில் (living to gether, marriage of convenience, love) இருக்கிறீர்களா என்கிற கேள்விக்கும் 64 சதவிகிதத்தினர் நோ சொல்லி இருக்கிறார்கள்.

விடையளிக்கிறார் அனோ மத்ஸுயி “எங்களைப் போன்ற இளைஞர்களுக்கு பெண்களைக் கண்டாலே பயமாக இருக்கிறது. நாம் ஏதாவது சொல்லப் போய், அவர்கள் நம்மை நிராகரித்துவிடுவார்களோ என்கிற பயம் என்னை போன்ற ஜப்பானிய இளைஞர்களுக்கு மிக அதிகமாக இருக்கும், இருக்கிறது அதை நானே பார்த்திருக்கிறேன். அதனால் பெண்கள் பின்னாடி சுற்றுவதை விட்டுவிட்டு உருப்படியாக ஏதாவது செய்யலாம் என்று தான் எங்கள் வேலைகளில் அதிக கவனம் செலுத்துகிறோம். சுருக்கமாக எனக்கே என்னைப் பிடிக்கவில்லை. அதை மாற்றவும் முடியாது தானே” என தளர்ந்தே பேசுகிறார் அனோ மத்ஸுயி. இத்தனைக்கு இவர் ஒரு ஸ்டாண்ட் அப் காமெடியன்.

பெரும்பாலான ஜப்பானிய ஆண்கள், பார்ன் வலைதளங்களில் இருந்து பார்ன் வீடியோக்களை பார்ப்பவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கான உடல் உறவுத் தேவைகளை பார்ன்-களிலேயே தீர்த்துக் கொள்கிறார்கள், என பார்ன் வீடியோ மற்றும் புத்தகங்களை விற்கும் 45 வயது japan பெண் மணி ஒருவர் தன் 12 வருட அனுபவத்தில் கூறுகிறார்.

அனா, Anna, 24 வயது japan பெண், கணக்காளராக பணியாற்றுகிறார் “உடல் உறவு என்பது எனக்கு ஒரு தேவை இல்லாத வேலையாகவே தெரிகிறது. எங்கள் கலாச்சாரத்தில் கல்யாணம் செய்து கொண்ட பின் பெண்கள் அத்தனை சுதந்திரமாக இருக்க முடியாது. என்னுடைய விருப்பமான உணவை உண்பது, எனக்கு பிடித்த நேரத்தில் தூங்கி எழுவது கூட நான் திருமணம் செய்து கொண்டால் முடியாதது ஆகிவிடும். இந்த இரண்டு விஷயங்களே என்னை உடல் உறவில் இருந்து என்னை பிரித்து வைக்கிறது அல்லது எனக்கு தேவை இல்லை என்று நினைக்க வைக்கிறது. உண்மையைச் சொன்னால் எனக்கு உடல் உறவு கொள்ள விருப்பமே இல்லை. உடல் உறவு கொண்டே ஆக வேண்டும் என தலை எழுத்தா என்ன” என்கிறார் அனா.

ஒரு நாட்டில் சில துறைகள் சில வயதினருக்காக மட்டுமே உருவாக்கப்படும். உதாரணமாக குழந்தை உணவுகள், விளையாட்டுப் பொருட்கள், குழந்தைகளுக்கான ஆடைகள், குழந்தைகளுக்கான புத்தகங்கள், வீடியோ கேம்கள், இளைஞர்களுக்கான இரு சக்கர வாகனங்கள், இளைஞர்களுக்கான கார்கள், கல்லூரிகள், உணவகங்கள், பெரியவர்களுக்கான மருத்துவமனைகள், மருந்துகள், டயாப்பர்கள் என்று வைத்துக் கொள்வோம்.

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

2 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

2 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

2 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

2 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

2 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

2 months ago