குடிசையில் இருந்து கோபுரம்.. உண்மையான ஸ்லம்டாக் மில்லியனர்..!

தனது 23வது வயதில், கையில் வெறும் 54,000 ரூபாயுடன்($795) கேரளாவில் இருந்து புறப்பட்டு, புதுவாழ்வை தானே துவங்க லண்டன் சென்றார் ரூபேஷ் தாமஸ். மெக்டொனால்டில் மணிக்கு 5.30 டாலர் சம்பாதித்த இவர், தற்போது தனது 39வது வயதில் தொழில்முனைவோராக, பல மில்லியன் டாலர் மதிப்புள்ள, பானங்கள் விற்கும் ஸ்டார்ட்அப் நிறுவனமான ‘டக் டக் சாயா’விற்கு அதிபதியாக மாறியுள்ளார். தான் எப்படிச் சுயமாக மில்லியனராக மாறினார் என்பதை அவரே கூறியதை இங்கே காணலாம்.

1978ஆம் ஆண்டு மே மாதம் பிறந்த ரூபேஷ், என்னதான் குடும்பம் நிதி பிரச்சனைகளைச் சந்தித்தாலும், தாய் ஷ்யாலா, தந்தை ஜோசப் மற்றும் தம்பி ராக்கேஷ் உடன் குழந்தைபருவத்தில் மகிழ்ச்சியாகவே வளர்ந்துவந்தார். ‘ ஒன்றுமில்லாத குடும்பத்தில் இருந்து தான் வந்தேன். ஒரு சிறு வாடகை வீட்டில் தான் எனது தாய் மற்றும் சகோதரர்களுடன் வளர்ந்தேன். எனக்கு 13 வயது இருக்கும் போது தான் கடைசியாக நானும் எனது சகோதரனும் சொந்த படுக்கையில் படுத்தோம்’ என்பதை நினைவு கூறுகிறார் ரூபேஷ்.

குடும்பத்தில் இருந்த நிதி பிரச்சனைகள் எதுவும் ரூபேஷின் படிப்பில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. தனது 18 வயதில், வீட்டிலிருந்து வடக்கில் 400மைல் தொலைவில் உள்ள சென்னைக்குச் சென்று, சென்னை பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்தார். “நான் பள்ளியில் படிக்கும் போது அறிவியல் மற்றும் கணிதத்தில் சிறந்து விளங்கினேன். அப்போது நாங்கள் இருந்த சூழலில் இது மட்டுமே நான் பொறியியல் படிப்பை தேர்வு செய்யக் காரணமாக இருந்தது” என விளக்குகிறார் ரூபேஷ்.

இவரின் குழந்தைப்பருவம் முழுவதுமே, உலகின் மற்றொரு பகுதியில் தனக்கான சிறந்த வாழ்க்கையைக் கட்டமைக்க முடியும் என்ற எண்ணம் தோன்றிக்கொண்டே இருந்தது. “எண்ணங்களைச் சுதந்திரமாக வெளிப்படுத்துதல், வித்தியாசமான சிந்தனை மற்றும் திறந்த புத்தகமாக இருப்பது என்பது எனக்கு மிகவும் முக்கியம் மற்றும் நான் சிந்திக்கும் விதத்தை வைத்து பார்க்கும் போது எனது எதிர்காலம் மேற்கத்திய நாடுகளில் தான் இருக்கும் என உறுதியாக நம்பனேன்” என்கிறார் ரூபேஷ். “எனது கேரள பாரம்பரியத்தை நினைத்து நான் மிகவும் பெருமைபடுகிறேன். ஆனால் இந்தியாவிற்கு வெளியே தான் எனது முழுத் திறனையும் காண்பிக்க முடியும் எப்போது நினைப்பேன்” என்கிறார்.

23 வயதில் கையில் வெறும் 795 டாலருடன், லண்டனுக்குப் புறப்பட்டார் ரூபேஷ். “எனக்கென்று எந்தவொரு குறிப்பிட்ட சமயமும் இல்லை. ஆனால் எனது தந்தை ஐக்கிய அரசு நாட்டில் உள்ள பயண ஏற்பாடு செய்யும் நிறுவனத்தில் பணியாற்றிய போது, ஐரோப்பியா செல்லும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. அப்போது ஐரோப்பாவில் மக்கள் எப்படி வசிப்பார்கள் மற்றும் எனக்கு அது சாத்தியமா எனக் கனவு காண ஆரம்பித்தேன்” என்கிறார்.

Related Post

” லண்டனுக்கு வந்ததும் நான் செய்த முதல் விசயம், அங்குள்ள பாராளுமன்றம் மற்றும் பிக்பென் போன்ற முக்கிய இடங்களுக்குச் சென்றேன். வெஸ்ட்மின்ஸ்டர் டியூப் ஸ்டேஷனில் இருந்து வெளியே வந்து, வெஸ்ட்மின்ஸ்டர் பாலத்தின் மீது நின்று கொண்டிருந் அந்தக் குறிப்பிட்ட நிகழ்வை எனது வாழ்நாளில் மறக்க முடியாது. அந்த மாலைப்பொழுதில் எனது கனவு நினைவேறியது” எனப் பகிர்கிறார்.

கிழக்கு லண்டனில் ஸ்ட்ரட்போர்டில் குடியிருப்பு ஒன்றை கண்டுபிடித்த ரூபேஷ், மெக்டொனால்டில் பணிக்குச் சேர்ந்தார். ” லண்டனில் இருப்பதைப் பாக்கியம் எனக் கருதியதாலும், வாழ்வில் ஏதாவது சாதிக்க வாய்ப்பு கிடைக்கும் என்பதாலும் என்னுடைய துவக்க நாட்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ” ஒரு மணி நேரத்திற்கு 5.30 டாலர் ஊதியம் வழங்கினாலும், சிரித்துக்கொண்டே மெக்டொனால்டில் நீண்ட நேரம் வேலை பார்த்ததுண்டு” என்கிறார். அடுத்தச் சிலவாரங்களிலேயே, வீடு வீட்டிற்குச் செல்லும் விற்பனை பிரதிநிதியாக இரண்டாவது வேலைக்குச் சேர்ந்தார்.

அசைக்கமுடியாத தொழில் தர்மத்தால் விரைவில் நிறுவனத்தில் சிறப்பான நபராக மாறிய ரூபேஷ் 2002ல் குழு தலைவராகப் பதவியுயர்வு பெற்றார். பணியிடத்தில் தனது மனைவி அலெக்ஸான்டிரியாவை சந்தித்த அவர், 2007ல் திருமணம் செய்துகொண்டார். “அது ஒரு கண்டதும் காதல் நிகழ்வு. அவரைப் பார்த்த அந்த நொடியே, எனது வாழ்வின் கடைசி வரை வருபவர் அவர் தான் எனக்குத் தெரிந்துவிட்டது” எனக் கூறுகிறார் ரூபேஷ்.

தனது பணியில் சிறந்து விளங்கி வந்த ரூபேஷ், தனக்கு மிகவும் பிடித்த உணவுத்துறையில் ஏதேனும் புதிதாக என்ற எண்ணம் உறுத்திக்கொண்டே இருந்தது. ” விற்பனை மற்றும் தொலைத்தொடர்பு தொழிலை மகிழச்சியுடன் செய்து வந்தாலும், அதில் நாட்டம் குறைவாகவே இருந்தது. எனவே நான் மற்ற தொழில்கள் மற்றும் வாய்ப்புகளைத் தேடினேன். மேலும உணவு சம்பந்தப்பட்ட தொழிலில் அதிக ஆர்வமும் இருந்தது.” என்ற ரூபேஷ்க்கு, மனைவி அலெக்ஸாண்டிரியா உடன் விடுமுறைக்கு இந்தியா வந்த போது அதற்கான உத்வேகம் பிறந்தது.

இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட லஸ்ஸி போன்ற பானங்களைத் தயாரிப்பதை தான் உண்மையில் கருத்தில்கொண்டிருந்தார் ரூபேஷ். ஆனால் அதற்கு லண்டன் தேவையான அளவு சந்தை இல்லை என்பதை உணர்ந்தார். 2014 டிசம்பரில் கேரளாவிற்கு வந்த பயணத்தின் போது தான், அலெக்ஸாண்டிரியா பாலுடன் கலந்த இந்திய தேநீரை விரும்பி அருந்துவதைக் கவனித்தார். அது தான் “டக் டக் சாயா”நிறுவனம் உருவாகக் காரணமாக இருந்தது.

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

10 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

10 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

10 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

10 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

10 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

10 months ago