மாருதி சுசூகி இந்தியா நிறுவனம் உள்ளீடு செலவுகள் அதிகரித்துள்ளதால் ஜூன் மாதம் முதல் தங்கள் கார்களின் விலையினை 1.9 சதவீதம் வரை உயர்த்த இருப்பதாக டீலர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளதாகத் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.
இந்த விலை ஏற்றத்திற்கு ஜப்பான் நாணயமான யென்னிற்கு எதிராகச் சரிந்து வரும் இந்திய ரூபாய் மதிப்பும் ஒரு முக்கியக் காரணம் ஆகும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
டீலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள மின்னஞ்சலில் ஜூன் 18 முதல் தங்கலது கார் மாடல்களின் விலையினை உயர்த்த முடிவு செய்வதை முன்கூட்டியே அறிவிப்பது தான் இந்த மின்னஞ்சலின் நோக்கம் என்றும் கார்களின் மாடல் பொருத்து விலை ஏற்றம் மாறும் என்றும், அதிகபட்சம் 1.9 சதவீதம் வரை விலை ஏற்றம் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
வாடிக்கையாளர்களிடம் இருந்து ஆர்டர்களைப் பெரும் போது முன்னெச்சரிக்கையாக இருக்கவும் என்றும் ஏற்கனவே கார் புக்கிங் செய்துள்ள வாடிக்கையாளர்களுக்கு முடிந்த வரை விரைவாகத் தொழிற்சாலையில் இருந்து வானங்களை டெலிவரி எடுக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.
கார் ஆர்டர்கள் நிலுவையில் இருந்தாலும் விலை உயர்வில் பாதுகாப்பு இருக்காது என்பதைத் தெரிவித்துக்கொள்வதாகவும் அறிவிப்புத் தேதியில் இருந்த புதிய விலைக்கு மட்டும் தான் கார்கள் விநியோகிக்கப்படும் என்றும் மாருதி சுசூகி தெரிவித்துள்ளது.
source: goodreturns.in
தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…
டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…
துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…
டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…
திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…
கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…