Categories: வணிகம்

ஒழுங்குமுறை விற்பனை கூட கிடங்கில் பஞ்சை இருப்பு வைத்து கடன் பெற புது ஏற்பாடு

கோவை: தமிழகத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூற்பாலை உள்ளன. இவை தங்கள் நூற்பிற்கு தேவையான பஞ்சை முன்கூட்டியே வாங்கி வைத்துக்கொள்வது வழக்கம். தற்போது, அறுவடை பஞ்சு வரத்து நிலவுவதால், தற்போதைய சூழ்நிலையில் பஞ்சு வாங்கி வைத்துக்கொள்ள போதுமான நிதி வசதி இல்லாதவர்கள் பஞ்சு வாங்காமல்,விலை உயரும்போது வாங்கி சிரமப்படுகின்றனர். இந்நிலையை தவிர்க்க நூற்பாலைகள் தாங்கள் வாங்கும் பஞ்சை தமிழகத்திலுள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் இருப்பு வைத்து, அதன் மதிப்பில் 70 சதவீத அளவிற்கு கடன் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து கோவை விற்பனைக்குழு செயலாளர் சந்திரசேகர் கூறியதாவது: கோவை மாவட்டத்தில் 10 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களின் கிடங்குகள் உள்ளன.
இங்கு ஏற்கனவே மக்காச்சோளம், கொப்பரை, சோளம், கம்பு, ராகி ஆகிய விவசாய விளைபொருட்களுக்கு ரூ.2 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. இந்நிலையில், புதிதாக பஞ்சு விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் நூற்பாலைகள் இருப்பு வைத்து கடன் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொருளின் மதிப்பில் 70 சதவீத அளவிற்கு கடன் தொகை வழங்கப்படுகிறது. நூற்பாலைகள் இருப்பு வைக்கப்படும் பஞ்சு ஒரு பேல் (170 கிலோ) அளவிற்கு வாடகையாக ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு ஒரு மாதத்திற்கு ரூ.12 செலுத்தினால் போதும். கோவை மாவட்டம் மட்டுமல்லாமல், மாநிலம் முழுவதிலும் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களையும் நூற்பாலைகள் பயன்படுத்தி, பயன் பெறலாம் என்றார்.ப்ளஸ்:தமிழ்நாட்டில் 21 விற்பனை குழுக்களின் கீழ் 268 ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் இயங்குகின்றன.

Related Post
Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

4 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

4 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

4 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

4 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

4 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

4 months ago