Categories: வணிகம்

தங்க நகை இறக்குமதிக்கு துபாயில் 5% வரி விதிப்பு

புதுடெல்லி: துபாய் செல்லும் இந்தியர்களில் பலர், அங்கிருந்து தங்கம் வாங்கி வர விரும்புகின்றனர். இந்தியாவை விட துபாயில் தங்கம் விலை குறைவு என்பதே இதற்கு காரணம். இதுபோல், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கைவேலைப்பாடுகள் நிறைந்த நகைகளுக்கு துபாயில் கிராக்கி உண்டு. இந்த இரண்டுக்குமே வேட்டுவைக்கும் விதமாக, துபாயில் இறக்குமதி தங்க நகைகளுக்கு 5 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய நகை வர்த்தகர்கள் சிலர் கூறுகையில், ”இந்தியாவில் தயாரிக்கப்படும் நுணுக்கமான வேலைப்பாடுகள் மிகுந்த நகைகளுக்கு துபாயில் வரவேற்பு உள்ளது. இதனால் இந்தியாவில் இருந்து 45 முதல் 50 சதவீத தங்க நகைகள் துபாய்க்கு ஏற்றுமதியாகின்றன.
தற்போது துபாய் விதித்துள்ள இறக்குமதி வரியால் இந்திய நகை ஏற்றுமதியாளர்களுக்கு பாதிப்பு ஏற்படும்” என்றனர். ஆனால் சில நகை விற்பனையாளர்கள் கூறுகையில், ”இந்தியாவில் இருந்து துபாயில் விற்பதற்காக அனுப்பும் நகைகளுக்குதான் இந்த வரி. பெரும்பாலான இந்திய நகைகள் துபாய் வழியாக வேறு நாடுகளுக்கு மறு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இவற்றுக்கு பாதிப்பு இல்லை” என்றனர். இந்தியாவில் இருந்து துபாய்க்கு சுற்றுலா செல்பவர்கள் 10 சதவீத சுங்கவரி இல்லாமலேயே வாங்கி வரலாம். இதுபோல் மொத்தம் சுமார் ₹4,000 முதல் ₹5,000 கோடி மதிப்பிலான மணமகள்களுக்கான தங்க நகைகளை இந்தியர்கள் கடந்த காலங்களில் வாங்கி வந்துள்ளதாக நகை வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Post
Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

2 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

2 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

2 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

2 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

2 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

2 months ago