Categories: வணிகம்

ரூபாய் நோட்டு தடையால் 16 ஆண்டில் இல்லாத அளவுக்கு வாகன விற்பனை கடும் சரிவு

புதுடெல்லி: கடந்த டிசம்பர் மாத ஆட்டோமொபைல் விற்பனை தொடர்பாக இந்திய வாகன உற்பத்தியாளர் சங்கம் (சியாம்) வெளியிட்ட அறிக்கை: ரூபாய் நோட்டு தடையால் ஸ்கூட்டர், பைக், கார் உட்பட அனைத்து வகையான வாகனங்கள் விற்பனையும் கடந்த டிசம்பரில் சரிவடைந்துள்ளன. ஒட்டுமொத்த அளவில் இந்த மாதத்தில் 12,21,929 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. முந்தைய ஆண்டு டிசம்பரோடு ஒப்பிடுகையில் இது 18.66% சரிவு. லகு ரக வணிக வாகனங்கள் விற்பனை மட்டும் 1.15% அதிகரித்து 31,178 வாகனங்கள் விற்பனையாகின. மற்றபடி உள்நாட்டு சந்தையில் கார் விற்பனை 8.14% சரிந்து 1,58,617 வாகனங்கள் விற்கப்பட்டன. 2014 ஏப்ரலுக்கு பிறகு இந்த சரிவு ஏற்பட்டுள்ளது.
பயணிகள் வாகன விற்பனை 1.36% சரிந்து 2,27,824 வாகனங்களும், டூவீலர் விற்பனை 22.04% சரிந்து 9,10,235 வாகனங்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 1997ம் ஆண்டுக்கு பிறகு இந்த அளவுக்கு விற்பனை குறைந்துள்ளது. இதுபோல் ஸ்கூட்டர் விற்பனை 15 ஆண்டில் இல்லாத அளவுக்கு 26.38% சரிந்து 2,84,384 வாகனங்கள் விற்றுள்ளன. இதற்கு முன்பு 2001ல் 27.05% விற்பனை சரிந்துள்ளது. பைக் விற்பனையும் 8 ஆண்டில் இல்லாத அளவுக்கு 22.5% சரிந்து 5,61,690 பைக் மட்டுமே விற்கப்பட்டுள்ளன. வணிக பயன்பாட்டு வாகனங்கள் 5.06% சரிந்துள்ளது என சியாம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்பு கடந்த 2000வது ஆண்டில் வாகன விற்பனை 21.81 சதவீதம் சரிந்திருந்தது. இதன்பிறகு மிகப்பெரிய சரிவு கடந்த மாதத்தில்தான் ஏற்பட்டுள்ளது. ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்புதான் இதற்கு முக்கிய காரணம் என சியாம் இயக்குநர் ஜெனரல் விஷ்ணு மாத்தூர் தெரிவித்துள்ளார்.

Related Post
Share

Recent Posts

கழுத்தின் கருமையை நீக்கும் எளிமையான முறைகள்

உருளைக்கிழங்கு கழுத்தில் இருக்கும் கருமையை போக்கும் தன்மை கொண்டது. உருளைக்கிழங்கை நன்றாக அரைத்து சாறு எடுத்து கழுத்தை சுற்றி தேய்த்து…

2 hours ago

உப்பை வைத்து சருமத்தை அழகுபடுத்தலாம்!!!!!

மேசைக்கரண்டி உப்பை ரோஸ் வோட்டர் சேர்த்து கலந்து, இதனை கொண்டு முகத்தை மென்மையாக ஸ்கரப் செய்து, பின் குளிர்ந்த நீரில்…

2 hours ago

பீட்ரூட் மசாலா செய்வது எப்படி ?

குழந்தைகளின் உடல் நலத்திற்கு பீட்ரூட் மிகவும் நல்லது. சப்பாத்தி, சாதத்துடன் சேர்த்து சாப்பிட இந்த பீட்ரூட் மசாலா அருமையாக இருக்கும்.தேவையான…

19 hours ago

சாமை மாம்பழ கேசரி

தேவையான பொருட்கள் சாமை அரிசி-ஒரு கிண்ணம், மாம்பழத் துண்டுகள்-அரை கிண்ணம், வெல்லம் / கருப்பட்டி -அரை கிண்ணம், முந்திரி, திராட்சை-சிறிதளவு,…

19 hours ago

புடலங்காய் ரிங்க்ஸ்

தேவையான பொருட்கள் வில்லைகளாக அரிந்த புடலங்காய் - 3 கப், உப்பு - தேவைக்கு, எண்ணெய் - பொரிப்பதற்குத் தேவையான…

19 hours ago

ஸ்வீட் அண்ட் சோர் சிக்கன்

தேவையான பொருட்கள் சிக்கன் எலும்பில்லாதது (தோல் நீக்கியது) - 400 கிராம், சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்,…

19 hours ago