Categories: வணிகம்

நாமக்கல்: முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் சரிவு – தேக்கத்தால் மேலும் விலை குறைய வாய்ப்பு

நாமக்கல் மண்டலத்தில் ஒரேநாளில் முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் சரிந்து 4 ரூபாய் 50 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளால் முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளதால் விலை குறைப்பு என கோழிப் பண்ணையாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 70 காசுகளில் இருந்து 20 காசுகள் குறைத்து 4 ரூபாய் 50 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. கடந்த 7-ம் தேதி முட்டை பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 70 காசுகளுக்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ஒரே நாளில் 20 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது.

Related Post

விலை குறைப்பு குறித்து கோழிப் பண்ணையாளர்கள் கூறுகையில்…
ஆடி மாதத்தை ஒட்டி தமிழகத்தில் முட்டை விற்பனை குறைந்த நிலையில், பல்வேறு மாவட்டங்களில் உணவகங்கள், ஹோட்டல்கள் திறப்பு நேரம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் கேரளாவிலும் முட்டை விற்பனை குறைந்துள்ளது. அதேபோல் வட மாநிலங்களிலும் முட்டை விற்பனை சரிந்து அங்கும் விலை குறைக்கப்பட்டுள்ளது.

எனவே தமிழகத்தில் முட்டை தேக்கத்தை குறைத்து விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் கொள்முதல் விலையை குறைத்துள்ளதாகவும், இவ்விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக கோழி பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

2 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

2 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

2 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

2 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

2 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

2 months ago