Categories: வணிகம்

10 ஆண்டுகளில் மாநில வரி வருவாய் வளர்ச்சி 4.4% ஆக சரிவு: வெள்ளை அறிக்கை வெளியீடு

முந்தைய திமுக ஆட்சியில் 13.89 சதவீதமாக இருந்த வருமானம், அதிமுக ஆட்சியின் இறுதியில் 4.65 சதவீதமாக சரிந்துள்ளது என்று தெரிவித்துள்ளார் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அதிமுக ஆட்சியின் நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டார். வெள்ளை அறிக்கையில் வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறுகையில், ”கடந்த 10 ஆண்டுகளில் மாநில வரி வருவாய் வளர்ச்சி 4.4 சதவீதமாக சரிந்துள்ளது. திமுக ஆட்சிக்காலத்தில் மாநில வரி வருவாய் வளர்ச்சி 11.4 சதவீதமாக உயர்ந்திருந்தது. 4 வழிகளில் மாநில அரசுக்கு வருமானம் வருகிறது.
மாநில வரி, வரியில்லா வருவாய், மத்திய அரசின் வரிப்பங்கீடு, திட்ட மானியம் ஆகியவையே வருமானத்திற்கான வழிகள். இதில் மாநில வரி வருவாயில் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டிருக்கிறது.

மின்துறை, போக்குவரத்துத்துறை ஆகியவற்றின் கடன் எச்சரிக்கை மிகுந்த சூழலில் உள்ளது. மாநில உற்பத்தியில் எத்தனை சதவிகிதம் என்பதை கொண்டே வருவாய் சதவிகிதம் கணக்கிடப்படுகிறது.

Related Post

முந்தைய திமுக ஆட்சியில் உற்பத்தியில் 13.89 சதவீதமாக இருந்த வருமானம், அதிமுக ஆட்சியின் இறுதியில் 4.65 சதவீதமாக சரிந்துள்ளது. 2018-19 அதிமுக ஆட்சியில் வருமானம் அதிகளவில் சரிந்துள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் ரூ. 39,079 கோடி மறைமுக கடனாக எடுக்கப்பட்டுள்ளது. மறைமுக கடனாக ரூ.39,079 கோடி எதற்காக எடுக்கப்பட்டது என்ற கேள்வி உள்ளது. தமிழக அரசின் நிதிப்பற்றாக்குறை ரூ.92,305 கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ.2,63,976 கடன் சுமை உள்ளது” என நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

2 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

2 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

2 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

2 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

2 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

2 months ago