கட்டுப்படி ஆகாது சாமி.. ரயில் வைபை சேவை திட்டத்தை கைவிட்ட மத்திய அரசு..!

மத்திய அரசு இந்திய ரயில்வே துறையை மேம்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக ரயில்களில் வைபை சேவை அளிப்பதாகவும், இதற்காகச் சோதனை திட்டம் நடத்த உள்ளதாகவும் 2019ல் முன்னாள் ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்தார்.

மேலும் இத்திட்டம் அடுத்த 4.5 வருடத்தில் இந்தியாவின் அனைத்து ரயில்களிலும் அதிவேக இண்டர்நெட் சேவை அளிக்கப்படும் எனவும் பியூஷ் கோயல் தெரிவித்தார், ஆனால் தற்போது மத்திய அரசு இதைச் செய்ய முடியாது எனக் கைதூக்கியுள்ளது.

நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்டு உள்ள எழுத்துப்பூர்வமான விளக்கத்தில் இந்திய ரயில்வே துறை ரயிலில் அதிவேக வைபை சேவை அளிக்கும் திட்டத்தைக் கைவிட்டுள்ளது. மக்களுக்கும், அரசுக்கும் இது செலவுக்கு ஏற்ற திட்டமாக இது இல்லை என்பதால் கைவிட முடிவு செய்யப்பட்டு உள்ளது தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் இத்திட்டத்தின் சோதனை திட்டம் ஹவ்ரா ஹவுரா ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் வைபை சேவை செயற்கைக்கோள் வாயிலாக அளிக்கப்பட்டத்து. இந்தக் கட்டமைப்புக்கு அதிகச் செலவாகும் என்பதை உணர்ந்து கைவிட முடிவு செய்துள்ளதாக ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

Related Post

இந்தத் திட்டம் செயல்படுத்த அலைக்கற்றை வாங்குவதற்கும், கட்டமைப்பை அனைத்து ரயில்களில் உருவாக்குவதற்கும் அதிகம் முதலீடு செய்ய வேண்டி நிலை உருவாகியுள்ளது.

இதுமட்டும் அல்லாமல் இத்திட்டத்திற்கு அளிக்கப்படும் பேண்ட்வித் பயணிகளுக்குப் போதுமானதாகவும் இல்லை என்பதால் இப்போதைக்கு ரயிலில் வைபை தேவை அளிக்கும் திட்டம் முழுமையாகக் கைவிடப்பட்டு உள்ளதாகத் தெரிவித்துள்ளார் அஸ்வினி வைஷ்ணவ்.

மத்திய அரசு திட்டத்திற்கு அமோக வரவேற்பு.. இண்டர்நெட் டேட்டா பயன்பாடு 400% அதிகரிப்பு..!

source: goodreturns.in

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

2 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

2 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

2 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

2 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

2 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

2 months ago