Categories: வணிகம்

ரூ.10,000 கோடி மதிப்பீட்டில் தருமபுரியில் மெகா ஜவுளி பூங்கா – அமைச்சர் காந்தி

தருமபுரியில் 10,000 கோடி மதிப்பீட்டில் மெகா ஜவுளி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி தெரிவித்தார்.

சேலத்தில் காதி கிராப்ட் மற்றும் கோ-ஆப்டெக்ஸ் ஆகியவற்றை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி, மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மற்றும் துறை உயர் அதிகாரிகளுடன் இன்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்…

Related Post

‘கொரோனாவால் விற்பனை குறைந்த கோ ஆப்டெக்சில் தீபாவளிக்கு முன்னதாக விற்பனையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் விவசாயிகளுக்கு அடுத்து நெசவாளர்களுக்கே அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. ஆண்டுக்கு 365 நாளும் குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் நெசவாளர்களுக்கு அதிக ஊதியம் கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பட்டு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இதற்கு மாநில அரசு காரணமல்ல; ஒன்றிய அரசே காரணம். தருமபுரியில் 10 ஆயிரம் கோடியில் 1000 ஏக்கர் பரப்பளவில் மெகா ஜவுளி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்’ என்றார்.

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

1 year ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

1 year ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

1 year ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

1 year ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

1 year ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

1 year ago