Categories: வணிகம்

தொடர்ந்து தங்கம் விலை சரிவு கடந்த 3 நாளில் சவரன் 1,000 குறைந்தது

சென்னை: தங்கம் விலை கடந்த 2 மாதமாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. சில நேரங்களில் அதிரடியாக உயர்ந்தும், குறைந்தும் வந்தது. இந்நிலையில் கடந்த 3 நாட்களாக தொடர்ச்சியாக தங்கம் விலை குறைந்து வருகிறது. கடந்த 15ம் தேதி ஒரு சவரன் 36,680க்கு விற்கப்பட்டது. அதன் பிறகு 16ம் தேதி சவரன் 64 குறைந்து சவரன் 36,616க்கு விற்கப்பட்டது, 17ம் தேதி (நேற்று முன்தினம்) கிராமுக்கு 77 குறைந்து ஒரு கிராம் 4500க்கும், சவரனுக்கு 616 குறைந்து ஒரு சவரன் 36,000க்கும் விற்கப்பட்டது. இந்நிலையில் 3வது நாளாக நேற்றும் தங்கம் விலை சரிவை சந்தித்தது. அதாவது கிராமுக்கு 40 குறைந்து ஒரு கிராம் 4,460க்கும், சவரனுக்கு 320 குறைந்து ஒரு சவரன் 35,680க்கும் விற்கப்பட்டது.
தொடர்ச்சியாக 3 நாட்களில் மட்டும் தங்கம் சவரனுக்கு 1000 குறைந்துள்ளது. அதே நேரத்தில் நீண்ட மாதங்களுக்கு பிறகு தங்கம் விலை சவரன் 36,000க்கு கீழ் இறங்கியுள்ளது. தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருவது நகை வாங்குவோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Related Post
Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

4 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

4 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

4 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

4 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

4 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

4 months ago