Categories: வணிகம்

மொத்த விலை பணவீக்கம் இதுவரை இல்லாத அளவிற்கு 12.94% ஆக உயர்வு : அத்தியாவசிய பொருட்கள், பெட்ரோல், டீசல் விலை மேலும் அதிகரிக்கும் ஆபத்து!!

டெல்லி : இந்தியாவில் மே மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் இதுவரை இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது. மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், நாட்டின் பணவீக்க அளவீடு மே மாதத்தில் 12.94% உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் பணவீக்க அளவீடு 10.5% ஆக இருந்தது. எரிபொருள் மற்றும் மின்சாரம் மீதான பணவீக்கமும் 37.6% ஆக உயர்ந்துள்ளது. மார்ச் மாதத்தில் எரிபொருள் பணவீக்கம் 9.75% உயர்ந்தது. ஆனால் மே மாதத்தில் இது 4 மடங்கு உயர்ந்தது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வின் காரணமாக போக்குவரத்து நம்பி இருக்கும் அனைத்து பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது.மொத்த சந்தை உணவுப் பொருட்களின் பணவீக்கம் 8.11% உயர்ந்துள்ளது. உணவுப் பொருட்கள் அல்லாதவைகளின் பணவீக்கம் உயர்ந்து காணப்படுவது மேலும் சில மாதங்கள் நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் எரிபொருள் விலையேற்றம் ரூபாய் மதிப்பிழப்பு மற்றும் உள்நாட்டு எரிபொருள்கள் விலை உயர்வு போன்றவை இந்தியாவுக்கு சிக்கல் ஏற்பட காரணமாக அமையும்.

Related Post
Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

2 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

2 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

2 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

2 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

2 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

2 months ago