Categories: வணிகம்

“கிராமப்புற இளைஞர்களை சி.இ.ஓ.-க்களாக வளர்த்தெடுப்பீர்” – ஜகி வாசுதேவ் வலியுறுத்தல்

“வேலை தேடி மக்கள் நகரங்களுக்கு இடம்பெயர்வதை தடுக்க, கிராமங்களில் தொழில் முதலீடுகளை அதிகரிக்க வேண்டும். அங்குள்ள இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்து நிறுவனங்களின் சி.இ.ஓ-க்களாக வளர்த்தெடுக்க வேண்டும்” என்று வர்த்தக தலைவர்களிடம் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜகி வாசுதேவ் வலியுறுத்தினார்.

இதுகுறித்து ஈஷா அறக்கட்டளை வெளியிட்ட தகவல்: ஈஷா லீடர்ஷிப் அகாடமி சார்பில் ‘Human is not a Resource’ என்ற வருடாந்திர கருத்தரங்கு இணையம் வாயிலாக நடைபெற்றது. இதில் 11 நாடுகளைச் சேர்ந்த 150 வர்த்தக தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்த வர்த்தக கலந்துரையாடலில் ஜகி வாசுதேவ் பேசும்போது, “உலகம் முழுவதும் உள்ள தொழில் முதலீடுகளில் பெரும் பகுதி 25 முதல் 30 முக்கிய நகரங்களில் மட்டுமே முதலீடு செய்யப்படுகிறது.
இதனால், 160 கோடி (1.6 பில்லியன்) மக்கள் வேலை வாய்ப்பிற்காக நகரங்களுக்கு இடம்பெயர வேண்டியுள்ளது.

Related Post

மக்கள் எங்கு வாழ்கிறார்களோ, அங்குதான் தொழில் வளர்ச்சி நடக்க வேண்டும். தொழில் வளர்ச்சிக்காக மக்களை இடம்பெயர செய்வது சரியான முறை அல்ல. எனவே, இந்த பிரச்னைக்கு தீர்வு காண, கிராமப்புறங்களில் தொழில் வாய்ப்புகளை அதிகளவு உருவாக்க வேண்டும். அதற்கு, நீங்கள் உங்கள் நிறுவனத்தின் மொத்த முதலீட்டில் குறைந்தப்பட்சம் 10 முதல் 15 சதவீதத்தையாவது கிராமங்களில் முதலீடு செய்ய வேண்டும்.

தொழில் துறையின் தேவைக்கேற்ப அந்தந்த கிராமங்களில் உங்கள் நிறுவனத்தின் மூலம் திறன் மேம்பாட்டு பயிற்சி மையங்களை அமைத்து இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். அவர்களுக்குள் மறைந்து இருக்கும் திறமைகளை கண்டறிருந்து உங்கள் நிறுவனத்தின் சி.இ.ஓக்களாக உயரும் அளவிற்கு அவர்களை வளர்தெடுக்க வேண்டும். மனிதர்களின் அனைத்து செயல்பாடுகளிலும் மனித தன்மை கொண்ட இதுபோன்ற அம்சங்கள் மிகவும் அவசியம்” என்றார் ஜகி வாசுதேவ்.

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

2 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

2 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

2 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

2 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

2 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

2 months ago