தொழில்துறை தேக்கத்தை தொடர்ந்து உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பினர். பங்கு சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தின் முதலீடு செய்து வருகின்றனர் .
பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால், தங்கத்தின் தேவை அதிகரித்து, அதன் விலை உயரத் தொடங்கியுள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் தொழில்துறை தேக்கம் குறித்த பீதி நிலவி வந்த நிலையில், தங்கத்தின் விலை தற்போது ஏற்றம் இறக்கமாக இருந்து வருகிறது.
கடந்த மாதங்களில் ஒரு பவுன் ஆபரணத் தங்கம் 40 ஆயிரத்தைத் தாண்டியது. அதன் பிறகு தங்கத்தின் விலை ஏற்றம், இறக்கம் என இருந்து வருகிறது.
இந்நிலையில், சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.608 உயர்ந்துள்ளது. இதனால் சவரன் தங்கம் விலை ரூ.34,672 க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.76 உயர்ந்து, கிராம் தங்கம் விலை ரூ.4,334 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதனைப்போன்று சென்னையில் வெள்ளியின் விலை கிலோவிற்கு ரூ.1800 உயர்ந்து, ரூ.70,900 ஆக விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் மற்றும் வெள்ளி விலைகளால் இல்லத்தரசிகள் பெரும் சோகத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
குழந்தை சிகிச்சை பெற வந்த மருத்துவமனையின் தரையில் படுத்த தந்தை உறங்கும் புகைப்படம் வைரலாகியுள்ளது.அமெரிக்காவில் உள்ள மிசௌரி பார்மிங்க்டோன் நகரை…
டெல்லி: நாடு முழுவதும் கொரோனாவின் 2வது அலை வேகமாக பரவி வருகிறது. மேலும் தடுப்பூசிக்கும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த…
லண்டன்: பஞ்சாப் நேசனல் வங்கியில் கடன் பெற்று தப்பிச் சென்ற நிரவ் மோடியை நாடு கடத்த பிரிட்டன் அரசு உத்தரவிட்டுள்ளது.…
புதுச்சேரி: கொரோனா பரவலின் காரணமாக புதுச்சேரி மத்திய பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கல்லூரிகளின் தேர்வுகளும் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டு…
ஹொங்ஹொங்கில் 5 வயதே ஆன குழந்தையை அவரின் தந்தையும் இரண்டாம் தாயும் அடித்து உணவு கொடுக்காமல் துன்புறுத்தியதால் குழந்தை மருத்துவமனையில்…
சென்னை: சென்னையில் தினசரி 15 காவலர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவதாக சென்னை காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.சென்னை காவல் ஆணையர்…