Categories: வணிகம்

குறைந்தபட்ச ஆதரவு விலை; 577.63 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்

2021 ஜனவரி 21 வரை 577.63 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

2020-21 காரீப் சந்தைக் காலத்தில் குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் நடவடிக்கைகள்

82.71 லட்சம் நெல் விவசாயிகள் தங்களது விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ. 109057.75 கோடி பெற்றுள்ளனர்.

நடப்பு காரீப் சந்தைக் காலத்தில் (2020-21), காரீப் பயிர்களை, விவசாயிகளிடமிருந்து குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு அரசு தொடர்ந்து கொள்முதல் செய்து வருகிறது.

பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு, உத்தரகாண்ட், தெலங்கானா, சண்டிகர், ஜம்மு காஷ்மீர், குஜராத், ஆந்திரப் பிரதேசம், ஒடிசா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், பிகார், சத்திஸ்கர், கேரளா, மேற்கு வங்கம், அசாம், கர்நாடகா மற்றும் ஜார்கண்டில் நெல் கொள்முதலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இங்கு 2021 ஜனவரி 21 வரை 577.63 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டில் இதே காலத்தில் 472.82 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டிருந்தது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்தாண்டு இது வரை செய்யப்பட்டுள்ள நெல் கொள்முதல் 22.16 சதவீதம் அதிகமாகும்.

Related Post

இந்தாண்டில் இது வரையிலான மொத்த கொள்முதலில், பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் 202.77 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

நடப்பு காரீப் சந்தை காலத்தில் 82.7 லட்சம் விவசாயிகள் ஏற்கனவே பயனடைந்துள்ளனர். இவர்கள் தங்களது விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ. 109057.75 கோடி பெற்றுள்ளனர்.

மேலும், மாநிலங்கள் வேண்டுகோள்படி, தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலங்கானா, குஜராத், ஹரியானா, உத்தரப் பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான் மற்றும் ஆந்திரப் பிரதேசத்திலிருந்து 51.92 லட்சம் மெட்ரிக் டன் பருப்பு மற்றும் எண்ணெய் வித்துக்கள் ஆதரவு விலையில் கொள்முதல் செய்யவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து 1.23 லட்சம் மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சந்தை விலை, குறைந்தபட்ச ஆதரவு விலையை விட குறைந்தால், மற்ற மாநிலங்களில் பருப்பு மற்றும் எண்ணெய் வித்துக்கள் கொள்முதல் செய்ய, வேண்டுகோள் அடிப்படையில் ஒப்புதல் வழங்கப்படும்.

Share

Recent Posts

வத்தல் விலை குவிண்டாலுக்கு ரூ.500 உயர்ந்தது

விருதுநகர்: ஆந்திர மாநிலம் குண்டூர் மார்க்கெட்டிற்கு வத்தல் வரத்து திடீரென குறைந்துள்ளது. உள்ளூர் வத்தல் வரத்தும் தேவைக்கு ஏற்ப இல்லை,…

10 hours ago

சொல்வதை கேட்காத அதிகாரிகளை அடியுங்கள்: மத்திய பாஜக அமைச்சர் சர்ச்சை பேச்சு

பெகுசராய்: கோரிக்கைகள் தொடர்பாக மக்கள் சொல்வதை கேட்காத அதிகாரிகளை பிரம்பால் அடியுங்கள் என்று மத்திய பாஜக அமைச்சர் சர்ச்சையாக பேசியுள்ளார்.…

18 hours ago

திருவொற்றியூர் தொகுதியில் சீமான் களமிறங்க வாய்ப்பு என தகவல்.?

சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திருவொற்றியூர் தொகுதியில் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.நாம் தமிழர்…

18 hours ago

கள்ளக்காதல் விஷயத்தில் பெண்கள் எப்படி?… இணையதள ஆய்வில் பரபரப்பு தகவல்

புதுடெல்லி: தங்களது கணவருக்கு தெரியாமல் கள்ளக்காதல் விஷயத்தில் இந்திய பெண்கள் பலர் ஈடுபடுவதாக 'க்ளீடன்' இணையதளம் நடத்திய ஆய்வில் பரபரப்பு…

18 hours ago

திருவொற்றியூரில் போட்டியிடும் சீமான்.. 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களும் அறிமுகம்

சென்னை: நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.தமிழக சட்டமன்ற தேர்தலில் நாம்…

18 hours ago

துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்ற தல அஜித்..!

சென்னை ரைஃபிள் கிளப்பில் துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் கவனம் செலுத்தி வந்த அஜித், 46-வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல்…

18 hours ago