Categories: வணிகம்

திறன்மிகு துறைமுகங்களாக மாற்ற தொழில்நுட்பங்கள்: மத்திய அரசு ஆலோசனை

மத்திய துறைமுகம், கப்பல் மற்றும் நீர்வழி அமைச்சகத்தின் மூன்று நாள் ஆலோசனை கூட்டம் இன்று நிறைவுற்றது. மத்திய துறைமுகம், கப்பல் மற்றும் நீர்வழித்துறை அமைச்சர் மன்சுக் மண்டாவியா தலைமையில் அனைத்து முக்கிய துறைமுகங்களின் தலைவர்கள் மற்றும் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளுடன், குஜராத்தின் கட்ச்சில் உள்ள தி டெண்ட் சிட்டி-தோர்டோவில் 2021 ஜனவரி 21 முதல் 23 வரை இந்த விரிவான ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

இந்தியாவின் ஒட்டுமொத்த கடற்பரப்பையும் ஒருங்கிணைத்து நகர்ப்புற போக்குவரத்துக்கான கடலோர வழித்தடங்கள் கண்டறியப்பட்டன. அனைத்து முக்கிய துறைமுகங்களின் அவசியம் மற்றும் முக்கியமில்லா சொத்துகளை சிறப்பாக பயன்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

Related Post

செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல், பெரிய தரவு, புவி வேலி, துறைமுகங்களில் தரவு சார்ந்த போக்குவரத்து மேலாண்மை, ஐஓடி சார்ந்த சரக்குந்துகள் மேலாண்மை மற்றும் சரக்கு போக்குவரத்தை ஜிஐஎஸ் மூலம் கண்காணித்தல் போன்ற முக்கிய துறைமுகங்களை திறன்மிகு துறைமுகங்களாக மாற்றக்கூடிய பல்வேறு தொழில்நுட்பங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

நிறைவுரை ஆற்றிய மன்சுக் மண்டாவியா, இந்திய கடல்சார் லட்சியம்-2030 தயாராக உள்ளதென்றும், விரைவில் செயல்படுத்தப்படும் என்று கூறினார். ‘இந்தியாவின் கடல்சார் பெருமையை மீட்டெடுப்பதே நமது லட்சியம். இந்த ஆலோசனை கூட்டத்தின் மூலம் அனைத்து முக்கிய துறைமுகங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு மேலும் வலுப்பட்டு, பொது இலக்குகளை நோக்கி பணியாற்ற முடியும்,’ என்று அவர் தெரிவித்தார்.

Share

Recent Posts

வத்தல் விலை குவிண்டாலுக்கு ரூ.500 உயர்ந்தது

விருதுநகர்: ஆந்திர மாநிலம் குண்டூர் மார்க்கெட்டிற்கு வத்தல் வரத்து திடீரென குறைந்துள்ளது. உள்ளூர் வத்தல் வரத்தும் தேவைக்கு ஏற்ப இல்லை,…

9 hours ago

சொல்வதை கேட்காத அதிகாரிகளை அடியுங்கள்: மத்திய பாஜக அமைச்சர் சர்ச்சை பேச்சு

பெகுசராய்: கோரிக்கைகள் தொடர்பாக மக்கள் சொல்வதை கேட்காத அதிகாரிகளை பிரம்பால் அடியுங்கள் என்று மத்திய பாஜக அமைச்சர் சர்ச்சையாக பேசியுள்ளார்.…

17 hours ago

திருவொற்றியூர் தொகுதியில் சீமான் களமிறங்க வாய்ப்பு என தகவல்.?

சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திருவொற்றியூர் தொகுதியில் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.நாம் தமிழர்…

17 hours ago

கள்ளக்காதல் விஷயத்தில் பெண்கள் எப்படி?… இணையதள ஆய்வில் பரபரப்பு தகவல்

புதுடெல்லி: தங்களது கணவருக்கு தெரியாமல் கள்ளக்காதல் விஷயத்தில் இந்திய பெண்கள் பலர் ஈடுபடுவதாக 'க்ளீடன்' இணையதளம் நடத்திய ஆய்வில் பரபரப்பு…

17 hours ago

திருவொற்றியூரில் போட்டியிடும் சீமான்.. 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களும் அறிமுகம்

சென்னை: நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.தமிழக சட்டமன்ற தேர்தலில் நாம்…

17 hours ago

துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்ற தல அஜித்..!

சென்னை ரைஃபிள் கிளப்பில் துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் கவனம் செலுத்தி வந்த அஜித், 46-வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல்…

17 hours ago