அறிமுகம் இல்லாத யாரோ ஒருவர் போன் செய்து உங்களது நம்பருக்கு ஒரு கோடி லக்கி பிரைஸ் விழுந்துள்ளது, உங்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் கடன் வாங்க வாய்ப்பு வந்துள்ளது என்றெல்லாம் கூறி நமது விவரங்களைக் கேட்பார்கள்.
பெரும்பாலும் வங்கியில் இருந்து அழைப்பதாகக் கூறியே இந்த மாதிரியான தவறான அழைப்புகளும் எஸ்எம்எஸ்களும் வரும். இதுபோன்ற மாய வலையில் சிக்கி கோடிக் கணக்கில் ஏமாந்தவர்களும் உண்டு.
நாம் கணக்கு வைத்திருக்கும் வங்கிகள் நமக்கு நேரடியாக போன் செய்தோ அல்லது எஸ்.எம்.எஸ்
மூலமாகவோ நமது விவரங்களைக் கேட்பதில்லை. அவ்வாறு வரும் அழைப்புகளும், எஸ்.எம்.எஸ்களும் மோசடியானவைதான் என்று வங்கிகளே தொடர்ந்து விழிப்புணர்வு செய்து வருகின்றன.
ஆனாலும் இதுகுறித்த விழிப்புணர்வு மக்களிடையே குறைவாகவே உள்ளது. இந்த லிங்க்கை கிளிக் செய்தால் பணம் கிடைக்கும் என்றெல்லாம் எஸ்எம்எஸ் வரும். அதை கிளிக் செய்தால் உங்களது தனிநபர் தகவல்கள் திருடப்பட்டு, பண மோசடி நடைபெற வாய்ப்புள்ளது.
இந்நிலையில், வங்கிகள் அனுப்புவதாகக் கூறி மொபைல் நம்பருக்கு வரும் எஸ்எம்எஸ்கள் குறித்து வாடிக்கையாளர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் ஐசிஐசிஐ வங்கி தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஐசிஐசிஐ வங்கி மூன்று ஆலோசனைகளை வழங்கியுள்ளது.
இதுபோல, வங்கிகள் தரப்பிலிருந்து வரும் குறுஞ்செய்திகளை வாடிக்கையாளர்கள் மிகவும் கவனமுடன் பார்த்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று வங்கிகள் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் எஸ்பிஐ வங்கியும் தனது வாடிக்கையாளர்களுக்கு இதுபோன்ற எச்சரிக்கையை விடுத்திருந்தது.
விருதுநகர்: ஆந்திர மாநிலம் குண்டூர் மார்க்கெட்டிற்கு வத்தல் வரத்து திடீரென குறைந்துள்ளது. உள்ளூர் வத்தல் வரத்தும் தேவைக்கு ஏற்ப இல்லை,…
பெகுசராய்: கோரிக்கைகள் தொடர்பாக மக்கள் சொல்வதை கேட்காத அதிகாரிகளை பிரம்பால் அடியுங்கள் என்று மத்திய பாஜக அமைச்சர் சர்ச்சையாக பேசியுள்ளார்.…
சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திருவொற்றியூர் தொகுதியில் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.நாம் தமிழர்…
புதுடெல்லி: தங்களது கணவருக்கு தெரியாமல் கள்ளக்காதல் விஷயத்தில் இந்திய பெண்கள் பலர் ஈடுபடுவதாக 'க்ளீடன்' இணையதளம் நடத்திய ஆய்வில் பரபரப்பு…
சென்னை: நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.தமிழக சட்டமன்ற தேர்தலில் நாம்…
சென்னை ரைஃபிள் கிளப்பில் துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் கவனம் செலுத்தி வந்த அஜித், 46-வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல்…