டாடா மோட்டார்ஸின் அசுர வளர்ச்சி.. செப்டம்பரில் 162% விற்பனை அதிகரிப்பு..!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதத்தில் 8 வருடத்தில் இல்லாத அளவுக்கு விற்பனையை அதிகரித்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் 21,200 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது 162% அதிகமாகும்.

இது டாடாவின் டியாகோ மற்றும் நெக்ஸோ உள்ளிட்ட வாகனங்கள் கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும், 6000க்கும் மேற்பட்ட யூனிட்களை விற்பனை செய்துள்ளது. இது முறையே கடந்த ஆண்டினை விட முறையே 98% மற்றும் 111% அதிகமாகும். இதே டாடா ஆல்டோஸ் விற்பனையானது 20% அதிகரித்து 5,952 யூனிட்களாக அதிகரித்துள்ளது. இதே கடந்த ஆகஸ்ட் மாதத்தின் டாடா நிறுவனம் 18,583 யூனிட்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆக ஆகஸ்ட் மாதத்தோடு ஒப்பிடும்போது செப்டம்பரில் விற்பனையானது 14% அதிகரித்துள்ளது.

பொதுவாக அனைத்து வாகனங்களின் விற்பனையும் இந்த செப்டம்பர் மாதத்தில் அதிகரித்துள்ளது. இதே மக்களின் தனி நபர் இடைவெளி, சுகாதாரத்தினை மேற்கொள்ள வேண்டும் என்பதால், பொதுப் போக்குவரத்தினை தவிர்த்து, தனியார் போக்குவரத்திற்கு மாறி வருகின்றனர். எனினும் அடுத்து வருகின்ற சில மாதங்களுக்கும் விழாக்கால பருவம் என்பதால் விற்பனை அதிகரிக்கும். ஆக உண்மையான விற்பனை என்பது அடுத்த ஆண்டில் தான் தெரிய வரும் என்றும் நிபுணர்கள் கூறி வருவது நினைவு கூறத்தக்கது.

எனினும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இரண்டாவது காலாண்டில், அதன் சர்வதேச மொத்த விற்பனையானது குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியான அறிக்கையில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் அதன் சர்வதேச மொத்த விற்பனையானது 16 சதவீதம் சரிந்து, 2,02,873 வாகனங்களாக குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதில் ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனமும் உள்ளடங்கும்.

Related Post

பயணிகள் வாகன விற்பனையுடன் ஒப்பிடும்போது, அதன் வர்த்தக வாகனங்கள் விற்பனையானது, இரண்டாவது காலாண்டில் 29 சதவீதம் அதிகரித்து 56,614 வாகனங்களாக அதிகரித்துள்ளது.

அதோடு ஒட்டு மொத்த வாகன விற்பனையானது இரண்டாவது காலாண்டில் 9 சதவீதம் குறைந்துள்ளதாகவும் இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள தரவில் தெரிவித்துள்ளது.

இதே சர்வதேச அளவில் விரும்பப்படும் ஜாகுவார் லேண்ட் ரோவர் விற்பனையானது கடந்த ஜூலை – செப்டம்பர் காலத்தில் 91,367 வாகனங்களாகும். இந்த காலாண்டில் மொத்த விற்பனை என்பது 18,189 ஆகும். இதே முந்தைய மொத்த விற்பனை என்பது 73,178 என்றும் டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

எப்படியோ கடந்த சில மாதங்களாக சரிவில் இருந்த விற்பனையானது, செப்டம்பரில் அதிகரித்திருப்பது நல்ல விஷயம் தானே.

source: goodreturns.in

Share

Recent Posts

கழுத்தின் கருமையை நீக்கும் எளிமையான முறைகள்

உருளைக்கிழங்கு கழுத்தில் இருக்கும் கருமையை போக்கும் தன்மை கொண்டது. உருளைக்கிழங்கை நன்றாக அரைத்து சாறு எடுத்து கழுத்தை சுற்றி தேய்த்து…

2 hours ago

உப்பை வைத்து சருமத்தை அழகுபடுத்தலாம்!!!!!

மேசைக்கரண்டி உப்பை ரோஸ் வோட்டர் சேர்த்து கலந்து, இதனை கொண்டு முகத்தை மென்மையாக ஸ்கரப் செய்து, பின் குளிர்ந்த நீரில்…

2 hours ago

பீட்ரூட் மசாலா செய்வது எப்படி ?

குழந்தைகளின் உடல் நலத்திற்கு பீட்ரூட் மிகவும் நல்லது. சப்பாத்தி, சாதத்துடன் சேர்த்து சாப்பிட இந்த பீட்ரூட் மசாலா அருமையாக இருக்கும்.தேவையான…

19 hours ago

சாமை மாம்பழ கேசரி

தேவையான பொருட்கள் சாமை அரிசி-ஒரு கிண்ணம், மாம்பழத் துண்டுகள்-அரை கிண்ணம், வெல்லம் / கருப்பட்டி -அரை கிண்ணம், முந்திரி, திராட்சை-சிறிதளவு,…

19 hours ago

புடலங்காய் ரிங்க்ஸ்

தேவையான பொருட்கள் வில்லைகளாக அரிந்த புடலங்காய் - 3 கப், உப்பு - தேவைக்கு, எண்ணெய் - பொரிப்பதற்குத் தேவையான…

19 hours ago

ஸ்வீட் அண்ட் சோர் சிக்கன்

தேவையான பொருட்கள் சிக்கன் எலும்பில்லாதது (தோல் நீக்கியது) - 400 கிராம், சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்,…

19 hours ago