Categories: வணிகம்

ஐந்து துறைகளில் கரோனாவுக்கு பிந்தைய வாய்ப்புகள்: வெள்ளையறிக்கை தாக்கல்

சுகாதாரம், இயந்திரவியல், விவசாயம், தொழில் நுட்பம் மின்னணு உள்ளிட்ட 5 துறைகளில் கரோனாவுக்கு பிந்தைய வாய்ப்புகள் குறித்த வெள்ளையறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

‘கோவிட்டுக்குப் பிந்தைய காலங்களில் ‘இந்தியாவில் தயாரிப்போம்’ என்பதற்கு கவனத்துடன் கூடிய வழிமுறைகள்’ மற்றும் மருந்தாளுமைக் கலவைக் கூறுகள் – நிலைமை, பிரச்சினைகள், தொழில்நுட்ப ஆயத்த நிலை, சவால்கள் என்பது பற்றி தொழில்நுட்பம், தகவல், முன்னறிவிப்பு, மதிப்பீட்டுக்கழகம் (Technology Information, Forecasting and Assessment Council – TIFAC) தயாரித்துள்ள வெள்ளை அறிக்கையை மத்திய அறிவியல் தொழில்நுட்பம், சுகாதாரம், குடும்ப நலம், புவி அறிவியல் ஆகிய துறைகளுக்கான மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் டெல்லியில் வெளியிட்டார்.

தொழில்நுட்பம், தகவல், முன்னறிவிப்பு, மதிப்பீட்டுக் கழகத்தின் ஆளுமைக் குழுவின் தலைவர் டாக்டர் வி கே சரஸ்வதி, நிர்வாக இயக்குநர் பேராசிரியர் பிரதீப் ஸ்ரீவத்சவா, அறிவியலாளர் டாக்டர். சஞ்சய் சிங், திரு முகேஷ் மாத்தூர் எஃப்& ஏ (பொறுப்பு) தொழில்நுட்பம், தகவல், முன்னறிவிப்பு, மதிப்பீட்டுக்கழகம் ஆகியோரும் நிகழ்ச்சியில் உடனிருந்தனர்.

‘உலகச் சவால்களுக்கு உள்ளூர்த் தீர்வுகள், கொள்கைகள் – தொழில்நுட்ப அவசியங்கள் தேவைகள்’ என்ற புதிய மந்திரத்துடன் இந்தியப் பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்காக ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இதுபோன்ற வெள்ளை அறிக்கை வெளியிடப்படுவது குறித்து தொழில்நுட்பம், தகவல், முன்னறிவிப்பு, மதிப்பீட்டுக் கழகத்திற்கு ஹர்ஷ வர்தன் பாராட்டு தெரிவித்தார்.

Related Post

மரபுசாரா உத்திகளுக்குக் கொள்கை ஆதரவு அளிப்பது, விவசாயம் சுகாதாரம், ஐசிடி ஆகிய துறைகளில் சர்வதேச ஒத்துழைப்பை ஏற்படுத்திக் கொள்வது; புதிய தொழில்நுட்ப உத்வேகத்தை ஏற்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் மூலமாக இந்தியப் பொருளாதாரம் மீட்சிப் பாதையில் பயணிக்கும் என்று அவர் கூறினார்.

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையிலான பாதையை வடிவமைப்பதற்கு இந்த வெள்ளை அறிக்கையை குறித்துக் கொள்ளுமாறு தொழில் உலக நண்பர்களையும், ஆராய்ச்சி கொள்கை அமைப்புகளையும் கேட்டுக்கொண்டார்.

நாட்டின் துறைவாரியான பலம், சந்தைகளின் போக்கு, ஐந்து துறைகளில் நிலவும் வாய்ப்புகள், நாட்டின் பார்வையிலிருந்து முக்கியமாக இருக்கக்கூடிய ஐந்து துறைகளில் உள்ள வாய்ப்புகள், சுகாதாரம் இயந்திரவியல் ஐசிடி விவசாயம் தொழில் நுட்பம் மின்னணு ஆகியவற்றில் தேவைக்கும் வழங்தலுக்கும் உள்ள இடைவெளி, தன்னிறைவு, மிகப்பெரும் அளவிலான உற்பத்தித் திறன் போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து இந்த வெள்ளை அறிக்கை குறிப்பிடுகிறது.

பொது சுகாதார முறை, குறு, சிறு, நடுத்தரத் தொழில் பிரிவு, உலக அளவிலான உறவுகள்,அந்நிய நேரடி முதலீடு, வர்த்தக ஒருமைப்பாடு, புதிய நவீன தொழில்நுட்பங்கள் போன்றவை குறித்த கொள்கை சாத்தியங்களையும் இந்த அறிக்கை அடையாளம் கண்டுள்ளது. மிகச் சிறந்து விளங்கும் துறைகளில் தொழில்நுட்ப மேம்பாட்டுக்கு இது மிகவும் முக்கியமாகும். தொழில்நுட்பப் பரிமாற்றம், மிகச் சிறந்த தொழில் நுட்பங்கள், அவற்றை அடையாளம் கண்டு ஆதரவளித்து பரிசோதனை முயற்சியை மேற்கொண்டு இஸ்ரேல் ஜெர்மனி போன்ற புதிய திறன் வாய்ந்த நாடுகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு மாற்றுப் பொருள்களைத் தயாரிப்பதற்கான புதிய தொழில்நுட்பத் தளங்களை உருவாக்குவது போன்றவையும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்தியாவை சுயசார்பு இந்தியாவாக உருவாக்குவதற்கான தொழில்நுட்பக் கொள்கை அளவிலான உத்வேகத்தை உடனடியாக அளிப்பதற்கான பரிந்துரைகளாக இவை உள்ளன. பல்வேறு துறைகளின் இணைப்புகள் ஒன்றை ஒன்று சார்ந்திருக்கும் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் உற்பத்திப் பெருகுவதோடு வருவாயும் பெருகும் என்பதும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share

Recent Posts

படப்பிடிப்பில் ஜெய்க்கு நிகழ்ந்த விபரீதம்.! ஆனாலும், அவர் செய்த நல்ல விஷயம்.!

பிரபல தமிழ் நடிகர் ஜெயின் அர்ப்பணிப்பை கண்டு படக்குழு ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளது.கோலிவுட்டில் பிரபல நடிகராக இருந்து வருபவர் நடிகர் ஜெய்.…

3 hours ago

விபத்தில் சிக்கிய பிரபல நடிகை. சற்றுமுன் பரபரப்பு தகவல்.!!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலம் அடைந்த நடிகை யாஷிகா ஆனந்த் கடந்த சனிக்கிழமை இரவு புதுச்சேரியில் இருந்து கிழக்கு…

3 hours ago

இது எப்போ வரும்னு தெரியல.. கன்னடத்தில் உருவாகும் பிரம்மாண்ட திரைப்படம்.. ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள்.!!

KGF இரண்டாவது பாகம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள நிலையில் அதன் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படாமல் இருப்பது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.கன்னட படங்களில்…

3 hours ago

அருள்நிதியின் ‘தேஜாவு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு

அருள்நிதி நடித்து வரும் 'தேஜாவு' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.தேஜாவு என்று தலைப்பிட்டுள்ள அறிமுக இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கும் இந்த…

3 hours ago

கணவனான காதலன்.. சீரியல் நடிகையின் 8 வருட கனவு.. தலைமையேற்ற புன்னகை மன்னன்.!!

பாடலாசிரியர் சினேகனின் திருமணம் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.தமிழ் சினிமாவில் முன்னணி பாடலாசிரியரும் பிக்பாஸ் நிகழ்ச்சி…

3 hours ago

ஆகஸ்ட் 3ஆம் தேதி வெளியாகிறது ‘பிசாசு 2’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

ஆண்ட்ரியா நடித்து வரும் 'பிசாசு 2' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி வெளியாகிறது.2014 ஆம் ஆண்டு…

3 hours ago