ஆப்பிள் எடுத்த அதிரடி முடிவு.. சீனாவுக்கு மட்டும் விதிவிலக்கு.. காரணம் என்ன!

உலகம் முழுவதும் தனது ஆதிக்கத்தினை பரப்பி வரும் கொரோனா வைரஸ் தற்போது 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.

குறிப்பாக சொல்லவேண்டுமானால் 5,436 பேரினை பலி கொண்டுள்ளது.

இது தவிர 1,45.717 பேர் இந்த வைரஸினால் தாக்கம் அடைந்துள்ளனர். அதே போல் இந்தியாவிலும் தற்போது நூறு பேருக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஆப்பிள் ஸ்மார்ட்போன் நிறுவனம் தற்போது சீனாவினை தவிர்த்து மற்ற நாடுகளில் தனது சில்லறை விற்பனை நிலையங்களை மார்ச் 27 வரை தற்காலிகமாக மூட உத்தரவிட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகரியான டிம் குக் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
மேலும் அதே டிவிட்டர் பக்கத்தில் கூப்பார்டினே டெக் ஜியான்ட் ஆன ஆப்பிள் நிறுவனம் உலக மீட்சிக்காக 15 மில்லியனை செலவிட போவதாக தெரிவித்துள்ளார்.

அறிவிப்பு தற்காலிகமாக மூடல்

மேலும் ஆப்பிள் நிறுவனம் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆப்பிள் நிறுவனம் தனது ஆஃப் லைன் வர்த்தகத்தை மார்ச் 27 வரை தற்காலிகமாக மூடப்படும் என்றும் அறிவித்துள்ளது. மேலும் தொழில்நுட்ப நிறுவனமான அதன் ஆன்லைன் இருப்பை நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளமான ஆப்பிள் ஸ்டோர் ஆன்லைன் தளம் மூலம் தொடர்ந்து உணர வைக்கும் என்றும் அறிவித்துள்ளது.

Related Post

இழப்பு வருவாய் இழப்பு

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஆப்பிள் கற்றுக் கொண்ட பாடங்களில் ஒன்று அடர்த்தியான இடங்களைப் தவிர்ப்பது. ஆக அந்த வகையில் உலகம் முழுக்க உள்ள தனது சில்லறை விற்பனை நிலையங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் விற்பனை பாதிக்கும் என்பதோடு, ஏற்கனவே வருவாய் இழப்பினை பதிவு செய்துள்ள இந்த நிறுவனம் நடப்பு காலாண்டிலும் நஷ்டத்தினை காண வாய்ப்பாக அமையும்.

உற்பத்தி உற்பத்தி மீள்ச்சி

ஆப்பிள் நிறுவனம் சீனாவில் கொரோனா தாக்கம் தெரிய வந்த நிலையில், அங்கு ஆப்பிள் நிறுவனம் மட்டும் அல்லாது, மற்ற பல உற்பத்தி நிறுவனங்களும் உற்பத்தியை நிறுத்தின. இந்த நிலையில் மீண்டும் தற்போது தான் அங்கு சற்று மீள்ச்சி அடைய தொடங்கிய நிலையில், உலகளாவிய சில்லறை வர்த்தக நிலையங்களை மூட அறிவித்துள்ளது. இது நிச்சயம் அந்த நிறுவனத்தின் வர்த்தகத்தினை பாதிக்கும். எனினும் கொரோனா தாக்கத்திலிருந்து ஒதுங்கியிருக்க இது வழிவகுக்கும்.

source: goodreturns.in

Share

Recent Posts

ஜனவரி 24: சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.88.29; டீசல் விலை ரூ.81.14

சென்னை: சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.88.29 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் டீசல் விலை லிட்டருக்கு ரூ.81.14 என்ற…

52 mins ago

மத்திய பட்ஜெட் 2021-22: அல்வா நிகழ்ச்சியுடன் தொடங்கியது இறுதிகட்ட பணிகள்

மத்திய நிதிநிலை அறிக்கை 2021-22-க்கான நிதிநிலை அறிக்கை தயாரிப்பின் இறுதி கட்டத்தைக் குறிக்கும் அல்வா நிகழ்ச்சி இன்று மதியம் மத்திய…

52 mins ago

குறைந்தபட்ச ஆதரவு விலை; 577.63 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்

2021 ஜனவரி 21 வரை 577.63 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.2020-21 காரீப் சந்தைக் காலத்தில் குறைந்தபட்ச…

53 mins ago

திறன்மிகு துறைமுகங்களாக மாற்ற தொழில்நுட்பங்கள்: மத்திய அரசு ஆலோசனை

மத்திய துறைமுகம், கப்பல் மற்றும் நீர்வழி அமைச்சகத்தின் மூன்று நாள் ஆலோசனை கூட்டம் இன்று நிறைவுற்றது. மத்திய துறைமுகம், கப்பல்…

53 mins ago

வாடிக்கையாளருக்கு வங்கி தரும் எச்சரிக்கை!

அறிமுகம் இல்லாத யாரோ ஒருவர் போன் செய்து உங்களது நம்பருக்கு ஒரு கோடி லக்கி பிரைஸ் விழுந்துள்ளது, உங்களுக்கு ஒரு…

53 mins ago

சிலிண்டர் மானியம் உங்களுக்கு கிடைக்கவில்லையா.? அப்ப இதை செய்யுங்கள்.. கண்டிப்பா கிடைக்கும்.!!

கேஸ் சிலிண்டர் மானியம் உங்களுக்கு கிடைக்கவில்லையென்றால் என்ன செய்வது என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.மக்களின் அன்றாடத் தேவைகளில் ஒன்றாக எல்பிஜி…

53 mins ago