டெல்லி: இந்தியாவில் கார் விற்பனை 8.77% சரிவைச் சந்தித்துள்ளதாக இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடியால் கார் உள்ளிட்ட மோட்டார் வாகன விற்பனை கடும் சரிவை கண்டுள்ளது. இதனால் அனைத்து முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களும் பெரும் பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றன. குறிப்பாக, GST வரி விதிப்பால் விற்பனை சரிவு ஏற்பட்டுள்ளதால் அசோக் லைலேண்ட், மாருதி, மஹிந்திரா, BOSCH இந்தியா போன்ற பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களின் பெரும் பகுதி உற்பத்தியை நிறுத்தி வருகின்றன.மேலும் பங்குச்சந்தை தொடர்ந்து சரிவைச் சந்திக்கிறது. அதனால் அந்நிய முதலீட்டாளர்கள் பல்வேறு துறையில் செய்த முதலீடுகளை திரும்பப் பெறுகின்றனர்.
அதனால் கடந்த பிப்ரவரி மாதம் கார் விற்பனை 8.77% வீழ்ச்சி அடைந்துள்ளதாக இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் சங்கம் (SIAM – Society of Indian Automobile Manufacturers) தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியான அறிக்கையில், பிப்ரவரி மாதம் நாடுமுழுவதும் 2,51,516 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளது. அதாவது கார் விற்பனையை பொறுத்தவரையில் 8.77 சதவீத வீழ்ச்சியுடன் 1,56,285 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதேபோல் இருசக்கர வாகன விற்பனையில் 19.82 சதவீத வீழ்ச்சியுடன் 12,94,791 இருசக்கர வாகனங்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளன. வணிக பயன்பாட்டு வாகனங்கள் விற்பனை 32.9 சதவீதம் சரிந்து 58,670 ஆகவும், அனைத்து பிரிவுகளிலும் சேர்த்து ஒட்டுமொத்த உள்நாட்டில் வாகன விற்பனை 16,46,332 ஆகவும் உள்ளது. இதன் எண்ணிக்கை கடந்த 2019ம் ஆண்டு ஜனவரியில் 20,34,597 ஆக இருந்தது என்பதை SIAM சுட்டிக்காட்டியுள்ளது. இதன்மூலம் பெரும்பாலான இந்தியர்கள் பொருளாதார சரிவால் கார் வாங்குதை தவித்து வருகின்றனர் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை: சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.88.29 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் டீசல் விலை லிட்டருக்கு ரூ.81.14 என்ற…
மத்திய நிதிநிலை அறிக்கை 2021-22-க்கான நிதிநிலை அறிக்கை தயாரிப்பின் இறுதி கட்டத்தைக் குறிக்கும் அல்வா நிகழ்ச்சி இன்று மதியம் மத்திய…
2021 ஜனவரி 21 வரை 577.63 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.2020-21 காரீப் சந்தைக் காலத்தில் குறைந்தபட்ச…
மத்திய துறைமுகம், கப்பல் மற்றும் நீர்வழி அமைச்சகத்தின் மூன்று நாள் ஆலோசனை கூட்டம் இன்று நிறைவுற்றது. மத்திய துறைமுகம், கப்பல்…
அறிமுகம் இல்லாத யாரோ ஒருவர் போன் செய்து உங்களது நம்பருக்கு ஒரு கோடி லக்கி பிரைஸ் விழுந்துள்ளது, உங்களுக்கு ஒரு…
கேஸ் சிலிண்டர் மானியம் உங்களுக்கு கிடைக்கவில்லையென்றால் என்ன செய்வது என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.மக்களின் அன்றாடத் தேவைகளில் ஒன்றாக எல்பிஜி…