Categories: வணிகம்

‘யூனியன் லைஃப் ஸ்டைல் போனஸ்’ திட்டம் அறிமுகம்

யூனியன் அஷ்யூரன்ஸ், நூற்றுக் கணக்கான இலங்கையர்களுக்கு தனது புத்தாக்கமான ஆயுள் காப்புறுதித் தீர்வுகளினூடாக வலுவூட்டிய வண்ணமுள்ளது. யூனியன் அஷ்யூரன்சின் வாடிக்கையாளர்களுக்கு 2020ஆம் ஆண்டில் தமது எதிர்பார்ப்புகளை மேலும் பூர்த்தி செய்யக்கூடிய வகையில், ‘யூனியன் லைஃவ்ஸ்டைல் போனஸ்’ திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. பிரயாணம், விடுமுறை, ஆரோக்கியம், தொழில்நுட்ப சாதனங்கள் போன்றவற்றில் 40% வரை விலைக்கழிவுகளை முன்னணி வர்த்தக நாமங்களுடன் இணைந்து வழங்க கைகோர்த்துள்ளது. யூனியன் லைஃவ்ஸ்டைல் போனஸ் திட்டம் 2020 ஜனவரி 1ஆம் திகதி முதல் 2020 டிசெம்பர் 31ஆம் திகதி வரை செல்லுபடியாகும். இதனூடாக வாடிக்கையாளர்களுக்கு வருடம் முழுவதும் விலைக்கழிவுகளையும் சேமிப்புகளையும் பெற்றுக் கொள்வதை உறுதி செய்துள்ளது.
யூனியன் அஷ்யூரன்ஸ் ஆயுள் காப்புறுதித் திட்டமொன்றுக்கு 2020 மார்ச் 31ஆம் திகதிக்கு முன்னதாக தம்மை பதிவு செய்து கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு இந்த சலுகைகளை அனுபவிக்க முடியும். மாதாந்த தவணைக்கட்டணமாக ரூ. 15000 அல்லது அதற்கு மேற்பட்ட தொகைக்கான யூனியன் அஷ்யூரன்சின் ஆயுள் காப்புறுதித் திட்டத்துக்கு மாத்திரமே இந்தச் சலுகை செல்லுபடியாகும். ஹிக்கடுவ, ஹபரண, கண்டி போன்ற நாடு முழுவதிலும் பல்வேறு பகுதிகளில் காணப்படும் சினமன் ஹோட்டல் அன்ட் ரிசோர்ட்ஸ் தொடரில் 30%, 40% போன்ற விலைக்கழிவுகளை காப்புறுதிதாரர்களை பெற்றுக் கொள்ளலாம். அத்துடன் உள்நாட்டு விமான பயணங்களை மகிழ்ச்சியுடன் மேற்கொள்ளும் வகையில் சினமன் எயார் தெரிவு செய்யப்பட்ட விமான சேவைகளுக்கு 20% வரை விலைக்கழிவுகளையும், சர்வதேச ரீதியில் எயார் ஏசியா ஊடாக 10% வரை விமானச்சீட்டு மற்றும் ஹோட்டல் பக்கேஜ்களுக்கு வழங்க முன்வந்துள்ளது. காப்புறுதிதாரர்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தும் வகையில், நவலோக பிரீமியர் வெல்னஸ் சென்ரரில் வழங்கப்படும் பெருமளவு சுகாதார சேவைகளுக்கு பெறுமதி வாய்ந்த விலைக்கழிவுகளை வழங்கவும் யூனியன் அஷ்யூரன்ஸ் முன்வந்துள்ளது. நவீன தொழில்நுட்ப சாதனங்கள் இன்றைய வாழ்க்கையின் முக்கிய அங்கங்களாக அமைந்துள்ளன. அவ்வாறான நவீன சாதனங்களை JKOA இலிருந்து கொள்வனவு செய்யும் போது அலைபேசிகள், புரொஜெக்டர்கள், ஸ்பீக்கர்கள், போட்டோப்பிரதி இயந்திரங்கள் போன்றவற்றுக்கு விசேட விலைக்கழிவுகளை பெற்றுக் கொள்ளலாம். மேலும், காப்புறுதிதாரர்களுக்கு Vision Care இல் மூக்குக் கண்ணாடிகள், சன் கிளாஸ்கள் மற்றும் செவிக்குறைபாட்டு சாதனங்கள் போன்றவற்றுக்கு 10% விலைக்கழிவை பெற்றுக் கொள்ளலாம். மேலும், ராஜபக்‌ஷ ஒப்டிஷியன்சிலிருந்து மூக்குக் கண்ணாடிகள் மற்றும் சன் கிளாஸ்களை கொள்வனவு செய்யும் போது 15% விலைக்கழிவை பெறலாம். வாழ்க்கை முறைக்கு அவசியமான சகல அத்தியாவசிய அம்சங்களையும் உள்வாங்கி இந்த ஊக்குவிப்புத் திட்டத்தினூடாக காப்புறுதிதாரர்களுக்கு விசேடமான 2020 வருடத்தை அனுபவிக்க யூனியன் அஷ்யூரன்ஸ் வசதிகளை ஏற்படுத்தியுள்ளது.

Related Post
Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

5 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

5 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

5 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

5 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

5 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

5 months ago