Categories: வணிகம்

களனி கேபிள்ஸ் பிஎல்சிக்கு இரண்டு விருதுகள்

களனி கேபிள் பிஎல்சி, அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 18ஆவது SLIM வர்த்தக நாமச் சிறப்பு விருதுகள் 2019 இல் இரண்டு விருதுகளை தனதாக்கியிருந்தது. ஆண்டின் சிறந்த B2B வர்த்தக நாமம் (தங்க விருது), ஆண்டின் சிறந்த சமூக பொறுப்புணர்வு வர்த்தக நாமம் (வெண்கல விருது) ஆகிய இரு விருதுகளை களனி கேபல்ஸ் பிஎல்சி தனதாக்கியிருந்தது. இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவகத்தினால் (SLIM) வருடாந்தம் இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்படுவதுடன், இலங்கையில் காணப்படும் சிறந்த கூட்டாண்மை வர்த்தக நாமங்களின் செயற்பாடுகளை கௌரவிக்கும் வகையில் அமைந்துள்ளது. இதற்கு முன்னர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த SLIM வர்த்தக நாமச் சிறப்புகள் விருதுகள் வழங்கும் நிகழ்வுகளிலும் களனி கேபிள்ஸ் பிஎல்சிக்கு மேற்படி விருதுகள் வழங்கப்பட்டிருந்தமை விசேட அம்சமாகும்.
களனி கேபிள்ஸ் பிஎல்சியின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மஹிந்த சரணபால கருத்துத் தெரிவிக்கையில், ‘SLIM வர்த்தக நாமச் சிறப்புகள் 2019 நிகழ்வில் களனி கேபிள்ஸ் இரு பெருமைக்குரிய விருதுகளை மீண்டும் ஒரு தடவை வெற்றியீட்டியுள்ளமை மிகவும் பெருமைப்பட வேண்டிய விடயமாக அமைந்துள்ளது’ என்றார். களனி கேபிள்ஸ் வர்த்தக நாம அபிவிருத்தி முகாமையாளர் சன்ன ஜயசிங்க கருத்துத் தெரிவிக்கையில், நிர்மாணத் துறையில் பாதுகாப்பான மின் மற்றும் தொடர்பாடல் வயர்கள் தெரிவில் களனி கேபல்ஸ் நாமம் முன்னிலையில் திகழ்கின்றது. இதை உறுதி செய்யும் வகையில் இந்த விருதுகள் அமைந்துள்ளன.

Related Post
Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

4 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

4 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

4 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

4 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

4 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

4 months ago