10 லட்சம் பணியாளர்கள் வீட்டுக்கு அனுப்பப்படலாம்! பதற்றத்தில் ஊழியர்கள்! ஆட்டோ துறை சரிவின் எதிரொலி!

டெல்லி: 2019-ம் ஆண்டில் தொடக்கத்தில் இருந்து, இந்திய ஆட்டோமொபைல் துறை பற்றிய செய்திகள் எப்போதும் மக்கள் கவனத்தில் இருந்து வருகிறது. தொடர்ந்து பல வேலை இழப்புகள் நம்மை பயமுறுத்திக் கொண்டே இருக்கின்றன. ஏன்..?

இந்திய ஆட்டோமொபைல் துறையை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 4 கோடி பேர் வாழ்ந்து வருகிறார்கள். இந்திய உற்பத்தித் துறையில் சுமார் 45 சதவிகிதம் பங்களிப்பது ஆட்டோமொபைல் துறை தான்.

இந்த ஒரு துறை மட்டும் இந்தியாவின் மொத்த ஜிடிபியில் 7.5 சதவிகிதம் வரை பங்களித்து வருகிறார்கள். இவ்வளவு பெரிய துறையிலேயே தொடர்ந்து வேலை இழப்புகள், வேலை இல்லா நாட்கள் எல்லாம் வந்தால் பயப்படாமல் என்ன செய்வது..?

ஆட்டோமொபைல் என்கிற ஒரு துறையைச் சார்ந்து பெட்ரோல் போன்ற எரிபொருள் விற்பனை, இன்சூரன்ஸ், மெக்கானிக்குகள், வாகனங்களுக்கு கடன் கொடுக்கும் நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் என கணக்கில் வராத இன்னும் பல லட்சம் பேரின் வேலை வாய்ப்பும் இந்த ஆட்டோமொபைல் துறையைத் தான் நம்பி இருக்கிறது. இந்த துறை தொடர்ந்து சரிவதால் எத்தனை பேருக்கு வேலை பறி போகப் போகிறது என சில நிறுவனங்கள் தங்கள் கணிப்பை வெளியிட்டு இருக்கிறார்கள். அந்த கணிப்பை பார்ப்பதற்கு முன், முதலில் இந்திய ஆட்டோமொபைல் துறையின் சரிவின் ஆழத்தைப் பார்ப்போம்.

இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் இன்று வெளியிட்டு இருக்கும் கணக்கைப் பாருங்கள். இந்த செப்டம்பர் 2019-ல் பயணிகள் வாகனம் மொத்தம் 2,23,317 வாகனங்களைத் தான் விற்று இருக்கிறார்களாம். கடந்த செப்டம்பர் 2018-ல் இதே பயணிகள் ரக வாகனங்களின் விற்பனை அளவைப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. மொத்தம் 2,92,660 வாகனங்களை செப்டம்பர் 2018-ல் விற்று இருக்கிறார்கள். ஆக செப்டம்பர் 2018 உடன் செப்டம்பர் 2019-ஐ ஒப்பிடும் போது, 23.7%சரிவை சந்தித்து இருக்கிறது.

பயணிகள் வாகனத்தில் கார்கள் விற்பனை எப்படி இருக்கிறது எனப் பார்த்தால் அங்கும் சரிவு தான். உள்நாட்டில் விற்பனையான கார்களை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டால், இந்த செப்டம்பர் 2019-ல் 1,31,281 கார்களைத் தான் விற்க முடிந்து இருக்கிறதாம். கடந்த செப்டம்பர் 2018-ல் 1,97,124 கார்களை விற்று இருந்தார்களாம். ஆக கார்கள் விற்பனை கடந்த ஒரு வருடத்தில் 33.4 சதவிகிதம் சரிந்து இருக்கிறது. உள்நாட்டில் கார்கள் விற்பனை தான் மந்தம் என்று பார்த்தால் இருசக்கர வாகனங்களின் நிலை இன்னும் மோசமாக இருக்கிறது

Related Post

இந்தியாவில், கடந்த செப்டம்பர் 2019-ல் மொத்தம் 16,56,774 இரு சக்கர வாகனங்களை விற்று இருக்கிறார்கள். ஆனால் அதற்கு முந்தைய செப்டம்பர் 2018-ல் ஒட்டு மொத்தமாக 21,26,445 இரு சக்கர வாகனங்கள் விற்கப்பட்டு இருக்கின்றன. ஆக இதிலும் சுமார் 22 சதவிகிதம் சரிவு கண்டு இருக்கிறது. சரி பயணிகள் வாகனம், கார், இரு சக்கர வாகனங்கள் எல்லாமே விற்பனை சரிந்து இருக்கிறது கண ரக வாகனங்கள் விற்பனை என்ன என்று பார்த்தால் அங்கும் சோகம் தான்.

இந்தியாவில் செப்டம்பர் 2019-ல் லாரி, ட்ரக்குகள், டிப்பர்கள் போன்ற கண ரக வாகனங்கள் மொத்தம் 58,419 விற்று இருக்கிறார்களாம். ஆனால் கடந்த செப்டம்பர் 2018-ல் 95,870 கண ரக வாகனங்களை விற்றார்களாம். ஆக இந்த ஒரு துறையில் மட்டும் சுமார் 39 சதவிகிதம் விற்பனைச் சரிவைச் சந்தித்து இருக்கிறது இந்திய ஆட்டோமொபைல் துறை. இந்தியாவின் முன்னணி கண ரக வாகன தயாரிப்பாளர்களான அசோக் லேலண்ட் மற்றும் டாடா மோட்டார்ஸ் போன்ற நிறுவனங்களுக்கு இதனால் பலத்த அடி வாங்கி இருக்கிறார்கள்.

ஆக பயணிகள் வாகனம், கண ரக வாகனம், இரு சக்கர வாகனம் என அனைத்து ரக வாகனங்களையும் சேர்த்தால், இந்தியாவில் கடந்த செப்டம்பர் 2019-ல் 20,04,932 வாகனங்களைத் தான் விற்று இருக்கிறார்களாம். செப்டம்பர் 2018-ல் 25,84,062 வாகனங்கள் விற்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆக ஒட்டு மொத்தமாகப் பார்த்தால் இந்திய ஆட்டோமொபைல் துறையின் விற்பனை சுமார் 22.4 சதவிகிதம் சரிவைச் சந்தித்து இருக்கிறது.

ஏற்கனவே இந்திய ஆட்டோமொபைல் துறையில் சுமார் 275 டீலர்கள் தங்களால் விற்பனை சரிவு சிக்கல்களைச் சமாளிக்க முடியாமல் கடையை மூடிவிட்டார்கள். இதனால் சுமார் 30,000 பேர் தங்கள் வேலையை இழந்தார்கள். மாருதி சுசூகி சுமார் 3,000 ஒப்பந்த ஊழியர்களுக்கு வேலை இல்லை என வீட்டுக்கு அனுப்பியது. அசோக் லேலண்ட் தன் உற்பத்தி ஆலைகளில் சுமார் 10 – 15 நாட்கள் வேலை இல்லா நாட்களாக அறிவித்தார்கள். இதெல்லாம் கொசுறு என்பது போல் ஆட்டோமொபைல் உதிரி பாக உற்பத்தி நிறுவனங்களில் கொத்து கொத்தாக ஊழியர்கள் வீட்டுக்கு அனுப்பபட்டார்கள்.

Automotive Components Manufacturers Association of India (ACMA) கணிப்பின் படி, ஏற்கனவே கடந்த சில மாதங்களில் இந்திய ஆட்டோமொபைல் உதிரி பாக தயாரிப்பு நிறுவனங்களில் சுமார் 1,00,000 பேருக்கு வேலை பறி போய்விட்டதாகவும், மேற்கொண்டு, இந்திய ஆட்டோமொபைல் துறையில், இதே மந்த நிலை நீடித்தால், அடுத்த 3 – 4 மாதங்களில், மேலும் 10 லட்சம் பேர் வரை தங்கள் வேலையை இழக்க வாய்ப்பு இருப்பதாக ACMA இயக்குநர் வின்னி மேத்தா சொல்லி இருந்ததும் தானாகவே நினைவுக்கு வருகிறது.

இந்தியாவின் முன்னணி மனித வள மேம்பாட்டுத் துறை நிறுவனமான Team lease “இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்களில் சுமார் 10 சதவிகிதம் ஊழியர்கள் தொடர்ந்து வேலையில் இருந்து நீக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டு வருகிறார்கள்” எனச் சொல்லி இருந்தது. இந்த காலாண்டில் (அக்டோபர் – டிசம்பர் 2019) சுமார் 5 லட்சம் பேர் இந்த ஆட்டோமொபைல் துறையில் தங்கள் வேலையை இழக்கலாம் எனச் சொல்லி இருந்ததும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்திய ஆட்டோமொபைல் துறைக்கான இந்த மந்த நிலை சுமார் 6 – 9 மாதங்கள் வரை தொடரலாம் எனவும் சொல்லி இருந்ததையும் இங்கு நினைவுகூர வேண்டி இருக்கிறது.

Share

Recent Posts

ஜனவரி 24: சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.88.29; டீசல் விலை ரூ.81.14

சென்னை: சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.88.29 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் டீசல் விலை லிட்டருக்கு ரூ.81.14 என்ற…

52 mins ago

மத்திய பட்ஜெட் 2021-22: அல்வா நிகழ்ச்சியுடன் தொடங்கியது இறுதிகட்ட பணிகள்

மத்திய நிதிநிலை அறிக்கை 2021-22-க்கான நிதிநிலை அறிக்கை தயாரிப்பின் இறுதி கட்டத்தைக் குறிக்கும் அல்வா நிகழ்ச்சி இன்று மதியம் மத்திய…

52 mins ago

குறைந்தபட்ச ஆதரவு விலை; 577.63 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்

2021 ஜனவரி 21 வரை 577.63 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.2020-21 காரீப் சந்தைக் காலத்தில் குறைந்தபட்ச…

52 mins ago

திறன்மிகு துறைமுகங்களாக மாற்ற தொழில்நுட்பங்கள்: மத்திய அரசு ஆலோசனை

மத்திய துறைமுகம், கப்பல் மற்றும் நீர்வழி அமைச்சகத்தின் மூன்று நாள் ஆலோசனை கூட்டம் இன்று நிறைவுற்றது. மத்திய துறைமுகம், கப்பல்…

52 mins ago

வாடிக்கையாளருக்கு வங்கி தரும் எச்சரிக்கை!

அறிமுகம் இல்லாத யாரோ ஒருவர் போன் செய்து உங்களது நம்பருக்கு ஒரு கோடி லக்கி பிரைஸ் விழுந்துள்ளது, உங்களுக்கு ஒரு…

52 mins ago

சிலிண்டர் மானியம் உங்களுக்கு கிடைக்கவில்லையா.? அப்ப இதை செய்யுங்கள்.. கண்டிப்பா கிடைக்கும்.!!

கேஸ் சிலிண்டர் மானியம் உங்களுக்கு கிடைக்கவில்லையென்றால் என்ன செய்வது என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.மக்களின் அன்றாடத் தேவைகளில் ஒன்றாக எல்பிஜி…

52 mins ago