பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க மீண்டும் 3 மாதம் கெடு நீட்டிப்பு..!

டெல்லி : பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான கால அவகாசத்தை மத்திய அரசு மீண்டும் டிசம்பர் 31 வரை நீட்டித்துள்ளது.

முன்னதாக பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க முன்னதாக செப்டம்பர் 30ம் தேதி கடைசி நாளாக இருந்தது. பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என்று மத்திய அரசு கடந்த 2017ம் ஆண்டு சட்டம் கொண்டு வந்தது. இந்த சட்டத்தின் படி பான் எண்ணுடன் ஆதாரை இணைக்காவிட்டால், அவர்களின் பான் கார்டு செல்லாது என்றும் மத்திய அரசு எச்சரித்தது.

இந்த இணைப்பிற்காக ஏற்கனவே 5 முறை அரசு காலக்கெடு அளித்தது. ஆனாலும், இதனை பற்றி மக்களிடையே சரியான விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால், மக்கள் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க கால தாமதம் செய்து வந்தனர்.
இந்த நிலையில் செப்டம்பர் 30ம் தேதி தான் இறுதி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், செப்டம்பர் 30க்குள் இந்த பான் ஆதார் எண் இணைப்பு செய்யாவிட்டால், உங்களது பான் எண் செல்லாது என்றும் கூறப்பட்டது. இந்த நிலையிலும் கூட, இன்னும் பெரும்பான்மையான மக்கள் தங்கள் பான்- ஆதார் இணைப்பை செயல்படுத்தாத நிலையில், தற்போது டிசம்பர் 31 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

Related Post

ஏற்கனவே பல முறை கால நீட்டிப்பு வழங்கியுள்ள நிலையில், இந்த முறையும் டிசம்பர் 31குள் பான் எண் உடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால், நிச்சயம் உங்கள பான் செல்லாததாகி விடலாம். ஆக மக்கள் இதற்கு முன்பு இந்த இணைப்பை செய்துவிடுவது நல்லது.

இந்த இணைப்பின் போது பல பிரச்சனைகள் இருப்பதாக கூறப்படும் நிலையில், அவற்றை களைந்து, இந்த 3 மாத காலக்கெடுவிற்குள் சரி செய்ய வேண்டும். ஏனெனில் பான் எண்ணில் பெயர் மாற்றம், ஆதாரில் பெயர் மாற்றம், பிறந்த தேதி மாற்றம், பெயர்களில் உள்ள ஒர் சில எழுத்துகள் மாற்றத்தினால் கூட கடைசி நிமிடத்தில், இந்த இணைப்பில் பிரச்சனையாக அமையலாம், ஆக மக்கள் இவற்றை இப்போதே இணைக்க முற்பட வேண்டும். இதனால் உங்கள் நிதி பரிவர்த்தனை பாதிக்கப்படாமலும் இருக்கும்.

source: goodreturns.in

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

2 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

2 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

2 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

2 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

2 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

2 months ago