Categories
வணிகம்

மே 25, 26: பெரியார் சமுகக் காப்பு அணி பயிற்சி முகாம்

திராவிடர் கழக இளைஞரணி – மாணவர் கழகத்தில் ஓர் முக்கிய பிரிவாக உள்ள பெரியார் சமுகக் காப்பு அணியை வலுப்படுத்தும் நோக்கோடும், நமது மாநாடுகளின் பேரணியில் அணிவகுப்பை நடத்திடவும், பேரிடர் காலங்களில் துயருறும் மக்களுக்கு முன்னின்று உதவும் பணியாற்றிடவும், தமிழர் தலைவர் ஆசிரியர் சுற்றுப்பயணத்தில் பாதுகாப்பு அரணாக செயலாற்றிடவும், எந்த நேரத்திலும் எதற்கும் தயாராக உள்ள, உடல் வலிவு, உள்ள உறுதியும் கொண்ட மாவட்டத்திற்கு 50 இளைஞர்களை உருவாக்கும் நோக்கத்தோடு கீழ்க்கண்ட விவரப்படி பெரியார் சமுகக் காப்பு அணி பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.முதற்கட்டமாக மாவட்டத்திற்குப் 10 இளைஞர்களை பயிற்சியில் பங்கேற்கச் செய்திடுமாறு சம்பந்தப்பட்ட மாவட்ட பொறுப்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அவசரம், அவசியம்.பயிற்சி பெறுபவர்களுக்கான வயது: 18 முதல் 35 வரை குறிப்பு: மேற்கண்ட இரண்டு மய்யங்களில் இரண்டு நாட்கள் நடைபெறும் பயிற்சிக்கு மாவட்டத்திற்கு தகுதி வாய்ந்த 10 நபர்களின் பெயர் பட்டியலை (22.5.2019)க்குள் கழக தலைமை நிலையத்திற்கு அனுப்பி வைக்குமாறு மாநில, மண்டல, மாவட்ட திராவிடர் கழகம் மற்றும் கழகத்தின் அனைத்து அணி பொறுப் பாளர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.இவண்: சோ.சுரேஷ், மாநில அமைப்பாளர்,பெரியார் சமுகக் காப்பு அணி (9710944834)

Leave a Reply