நிறுவனத்தை நடத்த ஊழியர்களே விருப்பம்.. மறுமலர்ச்சி திட்டத்துடன் வங்கியை நாடிய ஜெட் ஊழியர்கள்

டெல்லி : ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடும் நிதி நெருக்கடி காரணமாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு தனது நிறுவனத்திற்கு பூட்டை போட்டது. இந்த நிலையில் இந்த நிறுவனத்தை வாங்க எந்தவொரு நிறுவனமோ, தனிப்பட்ட ஆட்களோ ஆர்வம் காட்டாத நிலையில், இந்த நிறுவனத்திற்கு இதுவரை சரியான எந்தவொரு பதிலும் எட்டபடவில்லை.

மேலும் இது குறித்து எஸ்.பி.ஐ-யும் எந்த ஒரு அறிக்கையும் வெளியிடாத இந்த நிலையில், ஜெட் ஏர்வேஸ்சின் முன்னாள் ஊழியர்கள் நிர்வாக கட்டுப்பாட்டை நாங்கள் எடுத்துக் கொள்கிறோம் என்று முன் வந்துள்ளனவாம்.

இதற்காக 3000 கோடி ரூபாயை வெளிநாட்டு முதலீட்டாளர்களிடமிருந்து ஏற்பாடு செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் ஊழியர்களின் ஒரு பகுதியினர் கூறியுள்ளனராம். ஆக இந்த ஊழியர் குழு கடன் வழங்கிய வங்கிகளான எஸ்.பி.ஐ, ஐ.சி.ஐ.சி.ஐ மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட வங்கிகளை ஜெட் ஏர்வேஸ்சின் மறுமலர்ச்சி திட்டத்துடன் அணுகியுள்ளனராம்.

புத்துயிர் கொடுத்த அன்னிய முதலீடுகள்.. ரியல் எஸ்டேட் துறையில் சாதகமான கொள்கையே காரணமாம்

மேலும் ஜெட் ஏர்வேஸின் சிறந்த பணியாளர்கள் குழுவும் சேர்ந்து, இந்த வங்கிகளுடன் இணைந்து சிறுபான்மை பங்குதாரர்களாகவும் செயல்பட விரும்புவதாகவும், துவண்டு போன ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தினை எடுத்து நடத்த விரும்புவதாகவும், இதற்காக ஒரு leveraged buy-out plan (LBO) முன்வைத்துள்ளனவாம்.

இந்த ஊழியர்கள் குழுவில் சங்கரன் பி, ரகுநாதன் தலைமையிலான வல்லுனர் குழுவில், பல்வேறு விமானிகள், பொறியாளர்கள் மற்றும் பல ஊழியர்கள், இதோடு ஊழியர் சங்கமும் இணைந்து பல்வேறு மறுமலர்ச்சி திட்டங்களை தீட்டிள்ளதாகவும், இதை பங்கு தாரர்களிடமும் கூறியுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

Related Post

இந்த திட்டத்தின் படி, ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் முதலில் நிறுவனத்தின் கட்டுப்பாட்டை எடுத்துக் கொள்வார்கள். அவர்கள் தற்போதுள்ள கடனளிப்பவர்களிடமிருந்து கடன் வாங்குவதோடு நிறுவனத்தில் முதலீடு செய்து இறுதியில் இறுதியில் பங்குதாரர்களாகவும் இணைவார்களாம்.

நீங்கள் நிறுவனத்தை நம்ப வேண்டாம் எங்களை நம்பி கடன் கொடுங்கள் அதுவும் தனிப்பட்ட கடனாக கொடுங்கள், அதை ஊழியர்கள் நிறுவனத்தின் செயல்பாட்டு மூலதனமாக எடுத்துக் கொள்வார்கள். இதன் படி வங்கிகள் ஊழியர்களுக்கு 1,500 கோடி கடன் வழங்க முடியும், இது ஒவ்வொரு ஊழியரின் 6 மாத சம்பளம் தான் இந்த தனிப்பட்ட கடனாக இருக்கும். ஆனால் இந்த கடனை ஊழியர்கள் முதலீடாக ஜெட் ஏர்வேஸின் எஸ்.பி.ஐ (SBI) வங்கியில் உள்ள 51 சதவிகித பங்குகளை வாங்கவும், எட்டிஹாட் (Etihad) உள்ள 12.5 சதவிகித பங்குகளை வாங்கவும் இந்த மீதமுள்ள 200 கோடி ரூபாய்க்கு புதிய பங்கு தாரர்களிடமும் வாங்கலாம். இந்த நிலையில் இந்த ஊழியர் குழு ஜெட் ஏர்வேஸை கட்டுப்படுத்த முடியும் என்கிறார்களாம்.

இதற்கு அடுத்தகட்டமாக அடிக்கடி பறக்கும் ப்ளையர்ஸ் மூலம் பணத்தை உயர்த்தவும் திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளதாம் இந்தக் குழு. மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு உரித்தான நான்கு டிக்கெட்களை வாங்க, டிக்கெட் வாங்குபவர்களுக்கு வங்கிகள் 10,000 ரூபாய்க்கு கடன் உதவி அளிக்கலாம். இந்த டிக்கெட்கள் 2 ஆண்டுக்கு செல்லும் என்றும், இதன் மூலமும் நிதியை உயர்த்தலாம் என்றும் இந்த குழு அறிவித்துள்ளதாம்.

இதையடுத்து ஏற்கனவே பணியாற்றும் நிலையில் உள்ள ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் டிக்கெட் பேக்குகளை வாங்குவோர் அனைவருக்கும் விருப்பமான அடிப்படையில் பங்குகள் வழங்குவதற்கான தீர்மானத் பத்திரத்தை நிறைவேற்றுவர். அதோடு 150 ரூபாய் விலையில், ஒவ்வொருவருக்கும் 100 பங்குகள் வீதம் தரலாம் என்றும். இதன் மூலம் 12,000 கோடி ரூபாய் வரை மூலதனம் உயர்த்தப்படும் என்றும் இந்த குழு கூறியுள்ளது.

மேலும் இந்த நிதி திரட்டல் 20,000 கோடி ரூபாயாக உயர்த்தப்படும், இதன் மூலம் இந்த நிதி செயல்பாட்டு மூலதனத்திற்காகவும், ஐந்து ஆண்டுகள் கழித்து கடனாளர்களுக்கு திரும்ப செலுத்துவதற்கும் இந்த நிதி உபயோகப் பயன்படும் என்றும் இந்த ஊழியர் குழு அளித்துள்ள அறிக்கையில் விளக்கப்பட்டுள்ளதாம்.

கடந்த ஏப்ரல் 17-ம் தேதி கடும் நெருக்கடியால் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தற்காலிகமாக இந்த சேவையை நிறுத்தியது. மீண்டும் இந்த நிலையில் இந்த நிறுவனம் மீண்டும் இயங்க வேண்டுமெனில் புதிய முதலீடுகள் வந்தால் மட்டுமே சாத்தியமாகும், இது புதிய முதலீட்டாளர்களின் புதிய நிதி உட்புகுத்தலையே சார்ந்துள்ளது என்றும் சில அறிக்கைகள் கூறுகின்றன.

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

11 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

11 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

11 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

11 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

11 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

11 months ago