Categories: வணிகம்

ஐசிஐசிஐ வங்கியில் ஃபிக்சட் டெபாசிட் போட போகிறவர்கள் கவனத்துக்கு!

icici fd interest rates 2019 : பெரிய பெரிய பணக்காரர்கள் தொடங்கி பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் வரை பணத்தை சேமிக்க வங்கியை நாடுவது வழக்கம்! வங்கி தரும் வட்டி விகிதம், சலுகைகள், ஆண்டு பலன் இவை எல்லாவற்றையும் பார்த்த பின்பு தான் வாடிக்கையாளர்கள் வங்கியை தேர்வு செய்கின்றனர்.

அதிலும்,மக்களிடம் சேமிக்கும் பழகத்தை அதிகரிக்கும் நோக்கில் இந்திய நிதி நிறுவனங்கள் சாதாரணச் சேமிப்பு கணக்குகளை விட அதிக வட்டி விகித லாபம் அளிக்க வேண்டிய ஒரு திட்டமாக பிக்சட் டெபாசிட் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

இந்த பிக்சட் டெபாசிட் திட்டங்களில் சேமிப்பதன் மூலம் மக்களால் இரட்டிப்பு பலன்களை பார்க்க முடியும்.
ஆனால் அதற்கு முன்பு பொதுமக்களாகிய நீங்கள் எந்த வங்கியில் பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு அதிகமான வட்டி விகிதம் அளிக்கப்படுகிறது என்ற விவரத்தை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்பு வங்கியை அணுக வேண்டும்.

பிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்யும் போது என்ன வட்டி விகிதம் கூறுகிறார்களோ அது முதிர்வு காலத்தின் போது குறைவில்லாமல் கிடைக்கும். இதுவே சிறு சேமிப்புத் திட்டங்கள் என்றால் ஒவ்வொரு காலாண்டிலும் வட்டி விகிதம் மாறும்.

மாதம் ரூ. 15000 சம்பளம் வாங்கும் தனியார் ஊழியரா நீங்கள்? இனி உங்களுக்கும் பென்ஷன் உண்டு!

இதோ உங்களின் கவனத்திற்கு.. பிரபலமான வங்கிகளான ஐசிஐசிஐ, எச்டிஎப்சி, எஸ்பிஐ, போன்ற வங்கிகள் பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு தரும் வட்டி விகிதம்.

Related Post

ஐசிஐசிஐ வங்கி:

ஐசிஐசிஐ வங்கியில், 1 கோடி வரையில் சேமிக்கும் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 7.25 சதவீதம் வட்டி விகிதம் அளிக்கப்படுகிறது. மூத்த குடிமகன்களுக்கு 7.75 சதவீதம் வட்டி விகிதம் அளிக்கப்படுகிறது.

எச்டிஎப்சி வங்கி :

எச்டிஎப்சி வங்கியை பொருத்தவரையில் 5 வருடத்திற்கு தொடரப்பட்டிருக்கும் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் 1கோடி ரூபாய் வரை சேமிக்கும் வாடிக்கையாளர்களுக்கு 7.25 சதவீதம் வட்டி விகிதம் அளிக்கப்படுகிறது. மூத்த குடிமகன்களுக்கு 7.75 சதவீதம் வட்டி விகிதம் அளிக்கப்படுகிறது.

எஸ்பிஐ வங்கி:

எஸ்பிஐ வங்கியில் 5 வருடத்திற்கு தொடரப்பட்டிருக்கும் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் 1கோடி ரூபாய் வரை சேமிக்கும் வாடிக்கையாளர்களுக்கு 6.85 சதவீதம் வட்டி விகிதம் அளிக்கப்படுகிறது. மூத்த குடிமகன்களுக்கு 7.35 சதவீதம் வட்டி விகிதம் அளிக்கப்படுகிறது.

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

10 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

10 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

10 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

10 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

10 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

10 months ago