20 வருட சம்பளத்தை ஒரே நாளில் பெற்ற ஊழியர்..! உங்களுக்கும் வேண்டுமா..?

சுனில் ஒர் தனியார் நிறுவன ஊழியர். இவர் கடந்த பிப்ரவரி 2019-ல் தான் ஓய்வு பெற்றார். வயது 60. இவர் ஓய்வு பெறும் போது மாத சம்பளம் 51,000 ரூபாய். இவர் ஓய்வு பெறும் போது கடைசி மாத சம்பளம், கொஞ்சம் ரோஜாப்பூ, ஒரு கிலோ இனிப்பு வாங்கிக் கொடுத்து அனுப்பி விட்டார்கள் நிறுவனத்தினர்.

ஆனால் 2019 மார்ச் 01-ம் தேதி வருமான வரி எல்லாம் போக, இவர் கையில் 1,22,40,000 ரூபாய் பெற்றார் அதுவும் ஒரு நிமிடத்தில். எப்புடிங்க. இந்த காலத்துல ஒரு மனிஷன் கையில் காசு பாக்குறதே பெரிய விஷயம். அதுலயும் எப்படி 1.22 கோடி எனக் கேட்டால் விளக்குகிறார்.

சுனில் தன் 23-வது வயதில் இருந்து வேலைக்கு போய்க் கொண்டிருக்கிறார்.
தன் 46-வது வயதில் (2005-ல்) கையில் இருந்த 5.6 லட்சம் ரூபாயை அப்படியே 8 சதவிகிதம் வருமானம் தரக் கூடிய வங்கி எஃப்டிக்கள், தனியார் கம்பெனி ஃபிக்ஸட் டெபாசிட்டுகளிலும், கடன் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு தொடர்ந்து அடுத்த 15 வருடங்களுக்கு முதலீடு செய்தாராம்.

5.6 லட்சத்துக்கு 8% வட்டி போட்டால் 1.32 லட்சம் வரும். ஆக அடுத்த வருடம் 5.6 + 1.32 = 6.92 லட்சத்துக்கு 1.64 லட்சம் வட்டி கிடைக்கும். இப்படி 15 வருடம் மனிதர் அந்த முதலீட்டில் கை வைக்கவில்லை. புத்திசாலித்தனமாக இந்த முதலீடுகள் மூலம் வந்த வருமானத்துக்கு வரியும் கட்டத் தேவை இல்லாத ரீதியில் நல்ல முதலீடுகளைத் தேடி தேடி செய்திருக்கிறார். அந்த கட்டுப் பாடுக்கும் கூட்டி வட்டியின் பலத்துக்குக் கிடைத்த பலன் தான் இந்த 1.22 கோடி ரூபாய்.

என்ன செய்யப் போகிறார்

60 வயதில் இந்த 1.22 கோடி ரூபாயை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறீர்கள் எனக் கேட்டால் சிரிக்கிறார். பிறகு விளக்குகிறார். தம்பி இந்த 1.22 கோடி ரூபாயை கடன் மியூச்சுவல் ஃபண்டுகளில் மீண்டும் முதலீடு செய்யப் போகிறேன். கடன் மியூச்சுவல் ஃபண்டில் SWP – Standard Withdrawal plan என ஒரு வசதி உண்டு. அதன் படி ஒவ்வொரு மாதமும் 51,000 ரூபாய் மட்டும் என் வங்கிக் கணக்குக்கு வருவது போல எழுதிக் கொடுத்திருக்கிறேன். ஆக மாதம் வந்தால் நான் வேலையில் இருந்தது போல மாதம் 50,000 ரூபாய் வந்துடும். ஆக ஆண்டுக்கு 6 லட்சம் ரூபாயில் தொடங்குகிறது செலவு.

வரிக் கணக்கு

அப்படி மாதம் 50,000 ரூபாய் என்றால் ஆண்டுக்கு 6 லட்சம் ரூபாய் வரும். அந்த 6 லட்சம் ரூபாய் வருமானத்துக்கு வருமான வரி வரம்பு போக மிச்ச பணத்துக்கு வரி கட்டினால் போதும். இந்த வருடத்துக்கு 6,00,000 ரூபாய் தான். இந்த கூடுதல் ஒரு லட்சத்துக்கு மீண்டும் விபிஎஃப் அல்லது லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்து கழித்துவிடுவேன். இப்படித் தான் ஒரு ரூபாய் கூட வரி கட்டாமல் என்னால் நிம்மதியாக வாழ முடியும் என்கிறார் சுனில்.

எத்தனை வருடங்களுக்கு

சுனில் ஆண்டுக்கு 6 சதவிகிதம் என தன் செலவை அதிகரித்துக் கொண்டே போகிறார் என்று வைத்துக் கொண்டால் கூட 2019-ல் 6 லட்சம், 2020-ல் 6,36,000, 2021-ல் 6,74,160 என அதிகரித்துக் கொண்டே போகும். இத்தனை பெரிய தொகையை தன் 1.22 கோடி ரூபாயில் இருந்து கழித்துக் கொண்டே வருகிறார்கள்.

Related Post

ஆனால் வருமானம் வரும்

ஆனால் மீத தொகைக்கு வருமானம் வந்து கொண்டே இருக்கும். அப்படி ஒரு பக்கம் வட்டி கூடிக் கொண்டே இருக்க, இவர் இன்னோரு பக்கம் ஆண்டுக்கு ஆறு சதவிகிதம் என செலவு செய்து கொண்டே இருக்கிறார் என்று வைத்துக் கொண்டால் கூட 2043-ம் ஆண்டு வரை இவர் ஜாலியாக செலவு செய்யலாம். அதற்குள் எனக்கு 83 வயதாகிவிடும். நானும் நிம்மதியாக இறந்துவிடுவேன் என்கிறார்.

நாம் எப்படி செய்வது

இன்றைய தேதிக்கு ஒருவர் 40,000 ரூபாய் சம்பாதிக்கிறார் என்றால், அவருக்கு 15 வருடம் கழித்து எவ்வளவு சம்பளம் வரும். ஆண்டுக்கு 5 சதவிகிதம் சம்பள உயர்வு வைத்துக் கொண்டால் கூட 15 வருடத்துக்கு பின் 2034-ம் ஆண்டில் 83,150 ரூபாய் சம்பளமாக வாங்கிக் கொண்டிருப்போம்.

எவ்வளவு ரூபாய்

ஆக 83150 *12 = 9,97,800 ரூபாய் ஒரு ஆண்டு சம்பளம். என்றால் 9.98 லட்சம் * 20 வருடம் கணக்கிட்டால் சுமார் 2 கோடி ரூபாய் வேண்டும். ஆக 15 வருடங்கள் பிறகு நம்முடைய 20 வருட சம்பளத்தை ஒன்றாக பெற வேண்டும் என்றால் 2 கோடி ரூபாய் வேண்டும்.

எவ்வளவு முதலீடு

இன்று 8.50 லட்சம் ரூபாயை 8 சதவிகிதம் வருமானம் தரக் கூடிய முதலீடுகளில் முதலீடு செய்துவிட்டு 15 வருடங்கள் காத்திருந்தால் 2 கோடி ரூபாய் ரெடி. ஆக இன்றே உங்கள் 8.5 கோடி ரூபாயை முறையாக கணக்கில் காட்டி வங்கி எஃப்.டி களிலோ, கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளிலோ முதலீடு செய்யுங்கள். 2034-ல் 2 கோடி ரூபாய் கையில் இருக்கும். நாமும் சுனில் சார் மாதிரி அடுத்த 20 வருடங்களுக்கு ஜாலியாக இருக்கலாம்.

source: goodreturns.in

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

10 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

10 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

10 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

10 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

10 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

10 months ago