Categories
Uncategorized

தென்கொரியாவில் வேகமாக பரவும் கொரோனா வைரஸ் : பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு

சியோல், சீனாவில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் தற்போது பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் என பல்வேறு நகரங்களிலும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த வைரஸ் பாதிப்பால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. கொரோனா வைரஸ், சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் கடும் மிரட்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தென்கொரியாவில் வேகமாக பரவத்தொடங்கிய இந்த வைரஸ்க்கு 763 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து 8,720 பேரிடம் பரிசோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில், […]

Categories
Uncategorized

கொரோனா வைரஸ்க்கு ஈரானில் 15 பேர் உயிரிழப்பு

சியோல், சீனாவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ்க்கு தொடர்ந்து உயிர்ப்பலி அதிகரித்து வருகிறது. சீனா மட்டும் அல்லாது உலக நாடுகளையும் பீதிக்குள்ளாக்கிய கொரானோ வைரஸ் தென்கொரியா, ஜப்பான். ஈரான், இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கொரோனாவுக்கு ஈரானில் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 61 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக அந்நாட்டு சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்துள்ளார். இதனால் மத்திய கிழக்கு நாடுகளிடையே கொரோனா குறித்த அச்சம் அதிகரித்துள்ளது.

Categories
Uncategorized

3 கோடிக்கு ஏலம் போன மோனாலிசா ஓவியம்

பாரீஸ், பிரான்சை சேர்ந்த பிரபல கலைஞர் ‘ரூபிக் கியூப்ஸ்’ என்ற விளையாட்டு பொருளில் உள்ள கண்கவர் பிளாஸ்டிக் சதுரங்களை வைத்து மோனலிசா ஓவியத்தை வடிவமைத்தார். குழந்தைகளின் அறிவு திறனை அதிகரிக்க உதவும் வகையில் தயாரிக்கப்பட்ட இந்த மோனலிசா ஓவியம், தனித்துவமான புன்னகை மாறாமல் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டது. இந்த ஓவியம் கலை பிரியர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. பிரான்சில் உள்ள பல்வேறு அருங்காட்சியகங்களில் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்த இந்த ஓவியம், பாரீசில் உள்ள பிரபல ஏல நிறுவனம் ஒன்று, நேற்று […]

Categories
Uncategorized

விண்ணில் பறக்க முயன்ற விமானி தவறி விழுந்து பலி

நியூயார்க், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்தவர் மைக் ஹியூஸ் (64). விமானியான இவர் விண்வெளிக்கு செல்வதற்காக முற்றிலும் நீராவியால் இயங்கும் ராக்கெட்டை வீட்டிலேயே தயாரித்து, அதனை தொடர்ந்து சோதித்து வந்தார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை தனது நீராவி ராக்கெட் மூலம் விண்ணில் பறக்க முயன்ற மைக், 5,000 அடி உயரத்தை அடைய வேண்டும் என்பதை அவர் இலக்காக கொண்டிருந்தார். திட்டமிட்டபடி அவரது நீராவி ராக்கெட் விண்ணில் சீறிப் பாய்ந்தது. ஆனால் ராக்கெட் சென்ற வேகத்தில் அதனுடன் இணைக்கப்பட்டிருந்த […]

Categories
Uncategorized

பாகிஸ்தானில் சிலிண்டர் வெடித்து விபத்து : 6 பேர் பரிதாப பலி

பாகிஸ்தானில் பலூஸ்சிஸ்தான் மாகாணத்தின் தலைநகர் குவெட்டாவில் கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 3 பேர் பலத்த காயம் அடைந்தனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறன்னறனர். மேலும் சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

Categories
Uncategorized

கொரோனா வைரஸ்: தென்கொரியாவில் 7 பேர் பலி

சீனாவில் கடந்த ஆண்டு இறுதியில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.இதில் தென்கொரியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. நோய் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 700-ஐ தாண்டி உள்ளது.

Categories
Uncategorized

சிரியாவின் முக்கிய பகுதிகளை கைப்பற்றிய அரசுப்படைகள்

சிரியாவில் பல முக்கிய பகுதிகள் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருப்பதால், அடிக்கடி அங்கு தாக்குதல் நடைபெற்று வருகிறது. இந்த தாக்குதலில் அரசுப்படை வீரர்கள் மற்றும் பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்து வருகிறன்றனர். இந்நிலையில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த 3 முக்கிய நகரங்களான அல் நக்யார், அர நபியா, அல் டையிர் ஆகிய பகுதிகளை அரசு படைகள் கைப்பற்றியுள்ளன.

Categories
Uncategorized

சீனாவில் இருந்து வரும் பயணிகள் பாகிஸ்தான் ஈராக்கில் நுழைய தடை

சீனாவில் கடந்த ஆண்டு இறுதியில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.இதில் தென்கொரியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. நோய் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 700-ஐ தாண்டி உள்ளது. மேலும் ஈரானில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் அந்நாட்டிலிருந்து வரும் பயணிகளுக்கு பாகிஸ்தான், ஈராக் நாடுகள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

Categories
Uncategorized

அமெரிக்காவில் தொடரும் துப்பாக்கி கலாச்சாரம்

வாஷிங்டன், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் ஊழியராக பணியாற்றி வந்தவர் மணிந்தர் சிங் ஷாஹி (31). இந்தியரான இவர் அரியானா மாநிலம் கர்னல் பகுதியை சேர்ந்தவர் ஆவார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள நிலையில், இவர், கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான் அமெரிக்கா சென்றார். இந்நிலையில் மணிந்தர் சிங் ஷாஹி பணியில் இருந்தபோது, அவர் வேலை பார்க்கும் வணிக வளாகத்துக்குள் முகமூடி கொள்ளையர்கள் புகுந்தனர். அவர்கள் மணிந்தர் ஷாஹியை துப்பாக்கியால் […]

Categories
உலகம்

ட்ரம்பின் ஆங்கிலத்தை கலாய்த்த கெவின் பீட்டர்சன்!

இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் ஆங்கில உரையை கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் கிண்டலடித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 2 நாள் சுற்றுப்பயணமாக தனது குடும்பத்துடன் இந்தியா வந்துள்ளார். அவருக்கு இந்திய அரசு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் ட்ரம்ப்பும் இந்திய பிரதமர் மோடியும் அஹ்மதாபாத்தில் கட்டப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான மொடேரா ஸ்டேடியத்தை திறந்துவைத்தனர். இதனையடுத்து லட்சக்கணக்கான மக்களின் முன்னிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உரை நிகழ்த்தினார். அதில் […]