Categories: உலகம்

மறைந்த ஸ்டீபன் ஹாக்கிங்கின் வீல் சேர் சுமார் 3 கோடிக்கு ஏலம்!

மறைந்த இயற்பியல் ஆறிவியலாளர்ஸ்டீபன் ஹாக்கிங் பயன்படுத்திய வீல் சேர், சுமார் 3 கோடி ரூபாய்க்குஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

உலகத்தின் சிறந்த அறிவியல் ஆராய்ச்சியாளர்களில் முக்கியமானவர் ஸ்டீபன் ஹாக்கிங். கோட்பாட்டு இயற்பியலாளர், எழுத்தாளர் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பேராசிரியர் என பன்முக ஆளுமை கொண்டவர்.
இயற்பியல் ஆராய்ச்சிகளிலும், எழுத்துத்துறையிலும் அதீத ஈடுபாடு உடையவர். அண்டவியல் மற்றும் குவாண்டம் ஈர்ப்பு ஆகியன இவரது முக்கிய ஆய்வுத்துறைகள். இவர் தனது கடைசி புத்தகத்தில் ‘கடவுள் என்று யாரும் இல்லை’ என பதிவு செய்துள்ளார்.

சிறுவயதிலேயே அமையோட்ரோபிக் லேட்டரல் ஸ்க்லெரோசிஸ் (Amyotrophic Lateral Sclerosis ALS) என்னும் நரம்பு நோயால் தாக்கப்பட்ட இவர், கை கால் இயக்கம் மற்றும் பேச்சு பாதிப்புகளுக்கு உள்ளானவர். இருந்தாலும் மூளையின் செயல்பாட்டைக் கொண்டு 50 ஆண்டுகளுக்கு மேலாக சக்கர நாற்காலியில் அமர்ந்து கொண்டே, பல சாதனைகளை புரிந்துள்ளார். கடந்த மார்ச் மாதம் இவர் காலமானார்.

இவர் பயன்படுத்திய பொருட்களை, நியூயார்க் நகரத்தில் உள்ள கிறிஸ்டி என்ற நிறுவனம் ஏலத்தில் விட்டது. இவரது அறிவியல் கோட்பாடுகள், கூற்றுகள், கையால் எழுதப்பட்ட ஆய்வறிக்கைகள் என மொத்தம் 22 பொருட்கள் ஏலத்தில் விடப்பட்டன.

அக்டோபர் 31 ஆம் தேதியில் இருந்து நவம்பர் 8 ஆம் தேதி வரை நடந்த இந்த ஏலத்தில், 1965 ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் முனைவர் பட்டத்திற்காக, ஸ்டீபன் ஹாக்கிங்கால் சமர்பிக்கப்பட்ட அவரது கையொப்பத்துடன் இருக்கும் 117 பக்க தொகுப்பும் ஒன்று. இந்த ஏலம் நேற்றோடு முடிந்தது. இதில் அவரது முனைவர் பட்டத்தொகுப்பு 584,750 பவுண்டுக்கு ஏலம் போனது. இதன் இந்திய மதிப்பு, ஐந்து கோடியே ஐம்பத்தைந்து லட்சத்து 33 ஆயிரத்து999 ரூபாய் ஆகும்.

அதோடு, தன் முக்கால்வாசி வாழ்நாளை கழித்த அவரது பிரத்யேக சக்கர நாற்காலி மூன்று லட்சம் பவுண்டுக்கு ஏலம் போனது. இதன் இந்திய மதிப்பு, சுமார் இரண்டு கோடியே 86 லட்சத்து 8 ஆயிரத்து 435 ரூபாய் ஆகும். இதை யார் ஏலத்தில் எடுத்தார்கள் என்ற விவரத்தை ஏல நிறுவனம் வெளியிட வில்லை.

ஏலத்தில் கிடைத்துள்ள இந்தத் தொகையை ஸ்டீபன் ஹாக்கிங் அறக்கட்டளை மற்றும் மோட்டார் நியூரோன் நோய் ஆராய்ச்சி சங்கத்துக்கு வழக்கப்படும் என ஏலத்தை நடத்திய கிறிஸ்டி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Share

Recent Posts

காஷ்மீரில் பிஎஸ்ஏ சட்டத்தின்கீழ் முக்கிய குற்றவாளி கைது

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரஜெளரி மாவட்டத்தில் முக்கிய குற்றவாளி ஒருவர், பொது பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் (பிஎஸ்ஏ) கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர். ரஜெளரி மாவட்டத்தில் பல்வேறு குற்றச்செயலில்…

3 hours ago

வருமான ஆதரவு திட்டம்: 4.74 கோடி விவசாயிகளுக்கு ஏப்ரலில் இரண்டாவது தவணை

விவசாயிகளுக்கான வருமான ஆதரவு திட்டத்தின் (பிஎம்-கிசான்) கீழ், சுமார் 4.74 கோடி சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கான இரண்டாவது தவணை உதவித்தொகை, அடுத்த மாதம் வழங்கப்படும் என்று…

3 hours ago

பாஜகவின் மதிப்புமிக்க தலைவராக அத்வானி என்றும் நிலைப்பார்

"பாஜகவின் மதிப்புமிக்க தலைவராக எல்.கே. அத்வானி என்றென்றும் நிலைத்திருப்பார்' என்று சிவசேனை கட்சி புகழாரம் சூட்டியுள்ளது. இது தொடர்பாக, அக்கட்சி தனது அதிகாரப்பூர்வ நாளேடான "சாம்னா'வில் சனிக்கிழமை…

3 hours ago

காங்கிரஸ் 8-ஆவது வேட்பாளர் பட்டியல் வெளியீடு

மக்களவைத் தேர்தலுக்கான 8-ஆவது வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் சனிக்கிழமை வெளியிட்டது. இதில் கர்நாடகம், மத்திய பிரதேசம், உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம், மணிப்பூர், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களுக்கான வேட்பாளர்கள்…

3 hours ago

ராஜ் பப்பர் போட்டியிடும் தொகுதி மாற்றம்

உத்தரப் பிரதேச காங்கிரஸ் தலைவர் ராஜ் பப்பர், மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் தொகுதியை காங்கிரஸ் தலைமை மாற்றியுள்ளது. மொராதாபாத் தொகுதியில் அவர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, பதேபூர்…

3 hours ago

லோகியாவின் கொள்கைக்கு எதிரானவர்களுடன் சோஷலிஸ கட்சிகள் கூட்டணி

"லோகியாவின் கொள்கைக்கு எதிரான காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து, சோஷலிஸ கட்சிகள் மகா கூட்டணி அமைக்க முயன்று வருகின்றன' என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அந்தக் கட்சிகள்,…

3 hours ago