Categories: உலகம்

சியோல்: தீ விபத்தில் 7 பேர் உயிரிழப்பு; 11 பேர் படுகாயம்

சியோல் டவுண்டவுன் நகரில் உள்ள தனியார் விடுதியில் நேரிட்ட தீ விபத்தில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் படுகாயமடைந்த 11 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சியோலில் உள்ள டவுண்டவுன் நகரில் தனியார் தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு 50க்கும் மேற்பட்டோர் தங்கியிருந்தனர். இந்நிலையில், இந்த விடுதியின் 3ஆம் தளத்தில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.

இதில் சிக்கிய 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் 11 பேர் படுகாயமடைந்துள்ளனர். மீட்புப் பணியினர் இவர்களை மீட்டு தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு இந்த தீவிபத்து நிகழ்ந்துள்ளது.
உயிரிழந்தவர்களும், காயமடைந்தவர்களும் 40 முதல் 60 வயதுள்ளவர்கள் ஆவர்.

இந்த கட்டடத்தில் அவசர அழைப்பு மணி, அவசர வழி இருந்த போதிலும், தீயை அணைக்கும் கருவி இல்லாததால், தீயை உடனடியா அணைக்க முடியவில்லை என அப்பகுதியில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனார்.

Share

Recent Posts

பயங்கரவாதம், ஆப்கன் குறித்து டிரம்ப்-இம்ரான் ஆலோசனை

வாஷிங்டன்:அமெரிக்க அதிபர், டிரம்பை, பாகிஸ்தான் பிரதமர், இம்ரான் கான், நேற்று சந்தித்து பேசினார். அப்போது, ஆப்கன் மற்றும் பயங்கரவாத பிரச்னைகள் பற்றி, இருவரும் தீவிரமாக ஆலோசித்தனர்.பாகிஸ்தான் பிரதமராக…

10 hours ago

பிரிட்டன் புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் தேர்வு

லண்டன்:பிரிட்டன் புதிய பிரதமராக, 'கன்சர்வேடிவ்' கட்சியின் மூத்த தலைவர், போரிஸ் ஜான்சன், 55, தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.ஐரோப்பிய நாடான, பிரிட்டனின் பிரதமராக தற்போது பதவி வகிப்பவர், தெரசா…

10 hours ago

சீன, ‘மாஜி’ அதிபர் லீ பெங்க், மரணம்

பீஜிங்: சீனாவின் அதிபராக, 1987 -- 1998ம் ஆண்டு வரை இருந்தவர், லீ பெங்க், 90. இவர், 1998 - 2003ம் ஆண்டு வரை, தேசிய மக்கள்…

10 hours ago

ஹாங்காங் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்: 6 பேர் கைது

ஹாங்காங்கில் ஜனநாயக ஆதரவுப் போராட்டக்காரர்கள் மீது சரமாரி தாக்குதல் நடத்திய கும்பலைச் சேர்ந்த 6 பேரை அந்த நகர போலீஸார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:…

10 hours ago

சீனா: முன்னாள் பிரதமர் லீ பெங் மரணம்

சீன முன்னாள் பிரதமர் லீ பெங், தனது 90-ஆவது வயதில் மரணமடைந்தார். சீனாவின் 4-ஆவது பிரதமரான லீ பெங், அந்தப் பொறுப்பை 1987-ஆம் ஆண்டு முதல், 1998-ஆம்…

10 hours ago

பின்லேடன் இருப்பிடம் ஐஎஸ்ஐ-க்கு தெரியும்: இம்ரான் மறைமுக ஒப்புதல்

அல்-காய்தா தலைவர் பின்லேடனைப் பிடிப்பதில் அமெரிக்காவுக்கு தங்களது உளவு அமைப்பு உதவியதாகக் கூறியதன் மூலம், அவரது இருப்பிடம் குறித்து தங்களுக்கு ஏற்கெனவே தெரியும் என்பதை பாகிஸ்தான் பிரதமர்…

10 hours ago