வங்காளதேசத்தின் தலைமை தேர்தல் ஆணையர் நுருல் ஹூடா இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், வங்காளதேசத்தில் நாடாளுமன்ற தேர்தல் டிசம்பர் 23ம் தேதி நடைபெறும்.

இதற்கான வேட்பு மனு தாக்கல் செய்ய இறுதி நாள் நவம்பர் 19-ம் தேதி என்றும், வேட்பு மனுவை வாபஸ் பெறுவதற்கான இறுதி நாள் நவம்பர் 29-ம் தேதி என்றும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.மேலும் இந்த நாடாளுமன்ற தேர்தலில் முதல் முதலாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது. சில குறிப்பிட்ட தொகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்த இருக்கிறோம்.

தலைமை தேர்தல் ஆணையர் நுருல் ஹூடா தெரிவித்தார்.
ஆளும் அவாமி லீக் கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சியான ஜதியா கட்சி ஆகியவை தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பை வரவேற்று இருக்கின்றனர்.

Leave a Reply