ஜோஹன்ஸ்பர்க்: தென்னாபிரிக்க உள்நாட்டு விமானத்தில் இயந்திரக்கோளாறு காரணமாக அதன் இறக்கைகள் தீ பிடித்துள்ளது. கடந்த வாரம் அந்த தென்னாப்பிரிக்காவை சேர்ந்த சிவி-340 உள்நாட்டு விமானம் புறப்பட்டு உள்ளது. ஆனால் புறப்பட்ட சில மணி நேரத்தில் பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது. விமானத்தின் ஒரு பக்க இறக்கை தீ பிடித்து இருக்கிறது. இதனால் 2 பேர் பலியாகி உள்ளனர். 10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்று அறிக்கை வெளியாகி உள்ளது.இந்த ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விமானம் பறப்பதில் பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது. விமானத்தின் உட்பக்க பாகங்களில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. திடீர் என்று எல்லோரும் பார்த்துக் கொண்டு இருக்கும் போதே விமானத்தின்.
இந்த தீ வேகமாக பரவியும் இருக்கிறது. இதை அங்கிருந்த பயணிகள் வீடியோ எடுத்து இருக்கிறார்கள். இதனால் உள்ளே இருந்த பயணிகள் அச்சத்திற்கு உள்ளாகி உள்ளனர். விமானிகள் சாதுர்யமாக செயல்பட்டு விமானத்தை மீண்டும் கீழ் நோக்கி திருப்பி இருக்கிறார்கள். வெற்றிகரமாக மீண்டும் விமானம் இறக்கப்பட்டது. ஆனாலும் உள்ளே இருந்த பயணிகள் பெரிய அளவில் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர். இதனால் விமானத்தில் இருந்த பயணிகள் மற்ற பணியாளர்கள் பலருக்கு காயம் ஏற்பட்டு இருக்கிறது. இதில் இரண்டு பேர் பலியாகி உள்ளதாக விமான நிறுவனம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இதுகுறித்து துறை ரீதியான விசாரணை நடத்தப்படும் என்றும் ஏர்லைன்ஸ் நிறுவனம் கூறியுள்ளது. இது எப்படி ஏற்பட்டது என்று தெரியவில்லை என்று ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply