இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான். இவர் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி தலைவராக உள்ளார். இவரது கட்சி சார்பில் பாகிஸ்தானின் பாஞ்சாப் மாநிலத்தில் பேரணி நடந்தது. இதில் கலந்து கொண்டு இம்ரான்கான் பேசிக் கொண்டு இருந்த போது இவரை நோக்கி ஷூ வீசப்பட்டது.

தன் கட்சி நடத்திய பேரணியில் இம்ரான்கான் பேசிக் கொண்டு இருந்தார். அப்போது கூட்டத்தில் இருந்து வேகமாக பறந்து வந்த ஷூ அருகில் நின்றிருந்தவர் மீது விழுந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, இம்ரான் கான் தனது பேச்சை நிறுத்திக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டார்.

ஷூ வீசிய நபரை அங்கிருந்தவர்கள் பிடிக்க முற்பட்டனர். ஆனால் அதிக கூட்டம் காரணமாக அவரை பிடிக்க முடியவில்லை.

Leave a Reply