வாஷிங்டன்: அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பதவியில் இருந்து, ரெக்ஸ் டில்லர்சன் நீக்கப்பட்டுள்ளார். உளவு அமைப்பான, சி.ஐ.ஏ.,யின் இயக்குனர், மைக் போம்பியோ, புதிய வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் அரசில், வெளியுறவு அமைச்சராக இருந்தவர், ரெக்ஸ் டில்லர்சன். ஆப்ரிக்காவில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது, பதவியில் இருந்து விலகும்படி, அதிபர் டிரம்ப், சமீபத்தில் உத்தரவிட்டிருந்தார்.இதையடுத்து, பயணத்தை பாதியில் முடித்து, டில்லர்சன் நாடு திரும்பினார். இந்நிலையில், நேற்று வெளியிட்ட செய்தியில், வெளியுறவு அமைச்சர் பதவியில் இருந்து டில்லர்சன் நீக்கப்பட்டுள்ளதாக, டிரம்ப் அறிவித்துள்ளார்.அமெரிக்காவின் உளவு அமைப்பான, சி.ஐ.ஏ., எனப்படும் மத்திய புலனாய்வு அமைப்பின் இயக்குனர், மைக் போம்பியோ, புதிய வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.இணை இயக்குனராக இருந்த, ஜினா ஹாப்சல், சி.ஐ.ஏ.,யின் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சி.ஐ.ஏ.,வுக்கு முதல் முறையாக, ஒரு பெண், இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply