கொழும்பு: முத்தரப்பு ‘டுவென்டி-20’ லீக் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு 153 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணி, 19 ஓவரில், 9 விக்கெட்டுக்கு, 152 ரன்கள் எடுத்தது.இலங்கை தலைநகர் கொழும்புவில், இந்தியா, வங்கதேசம், இலங்கை அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ‘டுவென்டி-20’ தொடர் நடக்கிறது. இன்று நடக்கும் லீக் போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் மீண்டும் மோதுகின்றன. மழையால் தலா 19 ஓவர் கொண்ட போட்டியாக நடத்தப்பட்டது. ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.இலங்கை அணிக்கு குணதிலகா (17) சுமாரான துவக்கம் தந்தார். குசால் பெரேரா (3) ஏமாற்றினார்.
உபுல் தரங்கா (22), கேப்டன் திசாரா பெரேரா (15) பெரிய அளவில் சோபிக்கவில்லை. ஜீவன் மெண்டிஸ் (1) ஏமாற்றினார். குசால் மெண்டிஸ் (55) அரைசதம் கடந்தார். அகிலா தனன்ஜெயா (5) சொற்ப ரன்னில் அவுட்டானார். ஷனாகா (19) ஆறுதல் தந்தார்.இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 19 ஓவரில், 9 விக்கெட்டுக்கு 152 ரன்கள் எடுத்தது. சுரங்கா லக்மல் (5), பெர்ணான்டோ (0) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் ஷர்துல் தாகூர் 4, வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட் கைப்பற்றினர்.

Leave a Reply