பீஜிங்: வாழ்நாள் முழுவதும் ஜி ஜிங்பிங் சீன அதிபராக இருக்கும் வகையில், அந்நாட்டில் சட்டம் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இனி நிரந்தர அதிபராக அவர்தான் இருப்பார் என்றும் கூறப்படுகிறது.

சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த, ஜி ஜிங்பிங் அதிபராக உள்ளார். இவர், இரண்டாவது முறையாக சீன அதிபராக கடந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டார்.

2023ல் இவரது ஆட்சி முடிவுக்கு வருகிறது. சீனாவில் ஒரே நபர் தொடர்ந்து இரு முறைக்கு மேல் அதிபர் பதவி வகிக்கக் கூடாது என சட்டம் உள்ளது.

இதனால் ஜி ஜிங்பிங், 2023க்கு பின், அதிபர் பதவியில் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அதிபர் பதவி கால அளவை ரத்து செய்யும்படி, சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி கோரிக்கை வைத்தது. இதுகுறித்து கட்சி உயர்மட்ட குழு கூடி விவாதித்து ஏற்று கொண்டது.

இதனால் அதிபர் பதவிக்கு காலவரையரையை ரத்து செய்யும் முடிவுக்கு பார்லிமென்ட் ஒப்புதல் அளித்தது. இந்த சட்டத்திற்கு 2,958 பேர் ஆதரவாகவும், 2 பேர் எதிராகவும் ஓட்டு போட்டனர். 3 பேர் பார்லிமென்டிற்கு வரவில்லை. முதல் ஆளாக ஷி ஜிங்பிங் தனது ஓட்டை பதிவு செய்தார்.

Leave a Reply