பார்ப்பதற்கு அப்பாவைப் போல் இருக்கும் குழந்தைகள் உடலநலத்தில் அதிக ஆரோக்கியத்துடன் இருக்கும் என ஆய்வாளர்கள் கண்பிடித்துள்ளனர்.

பிறக்கும்போது உருவத்தில் தந்தையைப்போல இருக்கும் குழந்தை அவரின் பண்புகளையும் அவருடன் நேர்மறையான கருத்தையும் பெற்றிருக்கும் என நியூயார்க்கில் உள்ள பிங்கம்டன் யுனிவர்சிட்டி கண்டுபிடித்துள்ளது. இந்த ஒற்றுமையால் தந்தைக்கும் குழந்தைக்கும் இடையேயான நெருக்கம் அதிகரிப்பதுடன் அதனால் குழந்தையின் முதல் பிறந்தநாளின்போது அந்தக் குழந்தை அதிகமான ஆரோக்கியத்துடன் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆராய்ச்சியைச் சுமார் 715 குடும்பங்களிடம் மேற்கொண்டனர், அதில் அதிகமானவர்கள் தங்கள் தாயுடனேயே இருக்கின்றனர்.
அவர்களில்தந்தையுடன் நேரம் செலவழிக்கும் குழந்தைகள் அதிக நலமுடன் இருப்பது கண்டுபிக்கபட்டுள்ளது.

Leave a Reply