வாஷிங்டன் : அமெரிக்க அதிபரின் தலைமை அலுவலகமான, வெள்ளை மாளிகை முன், துப்பாக்கியால் சுட்டு,ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அமெரிக்காவின், வாஷிங்டன் நகரில், அதிபர், டொனால்டு டிரம்பின் அலுவலகமான, வெள்ளை மாளிகை உள்ளது.இதன், வடக்கு நுழைவாயில் முன், நேற்று காலை, மக்கள் கூட்டமாக நின்றனர். அக்கூட்டத்தில் இருந்த ஒருவர், திடீரென, தன் பையில் இருந்துதுப்பாக்கியை எடுத்தார். இதைப் பார்த்து, சுற்றி இருந்தவர்கள் பீதி அடைந்தனர். கண் இமைக்கும்நேரத்தில், அவர், தன்னைத் தானே துப்பாக்கியால் பலமுறை சுட்டார். இதில் அவர், சம்பவ இடத்திலேயே இறந்தார். இதில், வேறு யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த சம்பவம் நடந்த போது, அதிபரும், அவரது மனைவியும், அங்கு இல்லை.
இறந்தவர் பற்றியவிபரங்களை, போலீசார் ரகசியமாக வைத்துள்ளனர்.இது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.துப்பாக்கி கட்டுப்பாடு : அமெரிக்காவில், சமீபத்தில் நடந்த, பள்ளிக்கூட துப்பாக்கிச் சூடு சம்பவங்களில், பல மாணவர்கள் உயிரிழந்தனர். அடிக்கடி இது போன்ற சம்பவங்கள் நடப்பதை அடுத்து, துப்பாக்கி விற்பனையில் கட்டுப்பாடுகள் விதிக்க, அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான கூட்டம், புளோரிடாவில், நேற்று முன்தினம் நடந்தது. இதில், துப்பாக்கி விற்பனை செய்வதற்கு, அதிக கட்டுப்பாடுகளை விதிக்கும் சட்டத்திருத்தங்களை மேற்கொள்வது குறித்து விவாதிக்கப்பட்டன. இந்த சட்டத்திருத்தத்துக்கான ஓட்டெடுப்பு, இன்று நடக்கவுள்ளது.

Leave a Reply