மலேஷிய பிரதமர், நஜீப் ரஜாக்கை, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின், நேற்று மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். மலேஷியா நாட்டுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள ஸ்டாலின், அந்நாட்டின் பிரதமர், நஜீப் ரஜாக்கை நேற்று சந்தித்து பேசினார். பின், ஸ்டாலின் அளித்த பேட்டி:மலேஷிய பிரதமரை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். அவரது சிறந்த நிர்வாகத்தில், மலேஷியா முன்னேற்றம் அடைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த நாட்டின் முன்னேற்றத்தில், மலேஷியா வாழ் இந்தியர்களும், குறிப்பாக, தமிழர்களும் பெரும் பங்காற்றி வருவது பெருமைக்குரியது. கருணாநிதி பற்றியும், தமிழக மக்கள் பற்றியும், மலேஷிய பிரதமர் மிக ஆர்வத்துடன் கேட்டறிந்தார்.
அப்போது, மலேஷியாவில் நடைபெற உள்ள தேர்தலில், பிரதமர் நஜீப் ரஜாக், மீண்டும் வெற்றி பெற வேண்டும் என, வாழ்த்தினேன். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply