Categories: உலகம்

பொருளாதாரத்தில் இந்தியாவும், சீனாவும் வளர்ந்த நாடுகள்: உலக வர்த்தக மையத்தின் சலுகைகளை அனுபவிக்கக் கூடாது…டிரம்ப் பேட்டி

பென்சில்வேனியா: இந்தியாவும், சீனாவும் வளரும் நாடுகள் எனக்கூறிகொண்டு, உலக வர்த்தக மையத்தின் சலுகைகளை அனுபவித்து வருவதாகவும், இதனை அனுமதிக்க முடியாது என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். உலக வங்கியானது உலகளவில் மிகப்பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன்படி 2018-ம் ஆண்டுக்கான பட்டியலை கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிட்டது. இதில் இந்தியா பின்னோக்கி சென்றுள்ளது. அதாவது 2017-ம் ஆண்டு பட்டியலில் 5-ம் இடத்தில் இருந்த இந்தியா 2018 பட்டியலின் படி 7-ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. 2018 பட்டியலின் படி பொருளாதாரத்தின் மொத்த மதிப்பாக 20.5 ட்ரில்லியன் டாலர்களை கொண்ட அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. 13.6 ட்ரில்லியன் டாலர்களுடன் சீனா இரண்டாவது இடத்திலும், 5 ட்ரில்லியன் டாலர்களுடன் ஜப்பான் 3வது இடத்திலும் உள்ளது. 2.7 ட்ரில்லியன் டாலர்களுடன் இந்தியா 7வது இடத்தில் உள்ளது. ஆனால், பொருளாதார ஆய்வு நிறுவனம் வெளியிட்ட கணிப்பின்படி, 2019 ஆம் ஆண்டில் இங்கிலாந்தை முந்தி உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா வரும் என்றும் 2025 ஆம் ஆண்டில் ஜப்பானை முந்தி மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா இடம்பிடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் நடந்த கூட்டத்தில் பேசிய அதிபர் டிரம்ப், ஆசியாவின் இரண்டு பெரிய பொருளாதார நாடுகளான இந்தியா, சீனா ஆகியவை இனியும் வளரும் நாடுகள் அல்ல. அதனை கூறிக்கொண்டு, உலக வர்த்தக மையத்தின் சலுகைகளை அனுபவிக்கக் கூடாது. ஆனால், இரண்டு நாடுகளும், வளரும் நாடுகள் எனக்கூறிக்கொண்டு, சலுகைகளை அனுபவித்து வருகின்றன. இதனை பல ஆண்டுகளாக தொடர்ந்து செய்து வருகின்றன. உலக வர்த்தக மையம், அமெரிக்காவை சமமாக நடத்த வேண்டும். இந்தியா, சீனாவை வளர்ந்த நாடுகளாக பார்க்க வேண்டும். இந்த இரண்டு நாடுகளும் உலக வர்த்தக மையத்தின் சலுகைகளை அனுபவிப்பதை அமெரிக்கா அனுமதிக்காது. அவர் கூறினார்.

Share

Recent Posts

கூகுள் புதிய ஆண்ட்ராய்டு பெயரை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு Q இயங்குதளம் ஆண்ட்ராய்டு 10 என்ற பெயரில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இத்துடன் புதிய இயங்குதளத்துக்கான லோகோவையும் வெளியிட்டது.இதுவரை ஆண்ட்ராய்டு Q…

11 hours ago

கணினியை இப்படி எல்லாம் பயன்படுத்தி இருக்கிறீங்களா?

இன்றைய உலகில் கணினியின் தேவை அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. ஒவ்வொருவரும் கணினியின் பயனை உணர்ந்துக்கொள்வது அவசியமாகிவிட்டது. கணினியைப் பயன்படுத்துவது தவிர்க்க முடியாதாகிவிட்டது. இன்று கணினியை எளிய முறையில் கையாள…

11 hours ago

RS 13,999 விலையில் அறிமுகமானது MOTOROLA ONE ACTION.

மோட்டோரோலா ஒன் அதிரடி இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இந்த புதிய மோட்டோரோலா தொலைபேசி ஆகஸ்ட் 30 முதல் விற்பனைக்கு வருகிறது. நிறுவனத்தின் மற்ற ஸ்மார்ட்போன்களைப் போலவே,…

11 hours ago

200 ஆண்டுகள் ஏலியனாக வாழ்வேன் : நித்தியானந்தா ! வைரலாகும் வீடியோ !

நித்தியானந்தா என்றாலே எப்போதும், பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. சுவாமி நித்தியானந்தா ஆன்மீகத்தையும் தாண்டி அறிவியல் பூர்வமாகவும், ஐன்டீன்ஸ் விதியை தவறு என்று கூறி உலகத்தையும் திருப்பி போட்டார்.இந்நிலையில்,…

11 hours ago

சாலைகளில் செல்போன் பேசியபடி செல்லும் பெண்கள்தான் முதல் இலக்கு: கொள்ளையன் பகீர் வாக்குமூலம்.!

இப்போது வரும் புதிய தொழில்நுட்பங்கள் அனைத்தும் மக்களுக்கு பயன்படும் வகையில் தான் இருக்கிறது, ஆனால் அந்த தொழில்நுட்பத்தை எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும், எந்த இடத்தில் பயன்படுத்தக்…

11 hours ago

உணவாக மாறிய டைட்டானிக் கப்பல்! என்ன நடந்தது தெரியுமா?

ஒரு நூற்றாண்டிற்கு முன்னால் கடலுக்குள் மூழ்கிய ஆர்எம்எஸ் டைட்டானிக் கப்பல், அதன் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக ஒரு புதிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.கடலில் உள்ள உப்பு…

11 hours ago