Categories: உலகம்

இனி மனைவிக்கு அறிவிக்காமல் கணவன் விவாகரத்து செய்யக் கூடாது…..

சவூதி அரேபியர்கள் இனி அவர்களுக்கு மனைவிகளுக்கு அறிவிக்காமல் விவாகரத்து செய்யக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவு……

சவுதி அரேபியாவில் பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் ”சவுதி அரேபியா விஷன் 2030” என்ற தொலை நோக்குத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார். அதன்படி, பெண்களுக்கு அந்நாட்டில் இதுவரை அளிக்கப்படாத பல்வேறு உரிமைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

சவுதியில் சினிமா தியேட்டர் திறக்கவும் பெண்கள் கார் ஓட்டவும் விளையாட்டுகளை மைதானத்துக்குச் சென்று பார்க்கவும் அனுமதியளித்துள்ளார். அதையடுத்து, 2015-ம் ஆண்டு தான் அங்கு பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கப்பட்டது.
தொடர்ந்து முகமது பின் சல்மான் சவூதியின் மன்னராக பொறுப்பேற்ற பிறகு பெண்களுக்கு ஆதரவாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

பெண்களுக்கு வாகனம் ஓட்டுவதற்கு, அவர்கள் தனியாக தொழில் தொடங்க, குடும்பத்தினர் அனுமதி இல்லாமல் உயர்கல்வி பயில என அவர்களுக்கான பல உரிமைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், நாட்டில் பெண்கள் தங்களது ஆண் பாதுகாப்பாளரின் (Gaurdian) – கணவர்/தந்தை) உரிய அனுமதி இல்லாமல் அவர்களால் திருமணம், விவாகரத்து, பயணம் என சிலவற்றை செய்யவே முடியாது. இவை தற்போது சிறிது சிறிதாக மாற்றம் அடைந்து வருகிறது. அந்த வகையில் தற்போது மிக பெரிய தீர்ப்பை அந்நாட்டு நீதிமன்றம் வழங்கி உள்ளது. இதுவரை அங்கு மனைவிக்கு எந்த அறிவிப்பும் கொடுக்காமல் கணவரால் விவாகரத்து செய்து விட முடியும். இந்த முறையால் மனைவிக்கு ஜீவனாம்சம் கிடைக்காமல் போய்விடுகிறது.

இது போன்ற விதிகளால் மனித உரிமை மீறல் நடக்கிறது என்று குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில், இனி மனைவிக்கு, குறைந்தபட்சம் குறுஞ்செய்தி மூலமாவாது தகவல் கொடுத்துவிட்டு தான் விவாகரத்து பெற வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்நாட்டு இளவரசர் முகமது பின் சல்மான், 2030க்குள் புது சவுதியை உருவாக்க இருப்பதாக தெரிவித்திருந்தார். அதன்படி வாகனம் ஓட்ட உரிமை உட்பட பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது!

Share

Recent Posts

பொங்கலுக்கு விலை குறைந்த சாம்சங் ஸ்மார்ட்போன்கள்.!

தமிழர் திருநாளாம் தை பொங்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. இதையொட்டி சாம்சங் ஸ்மார்ட்போன் நிறுவனம் தற்போது விலையை குறைந்து விற்பனையை அதிரவிட்டுள்ளது.இதனால் ஏராளமான வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட்போன்களை வாங்க முன்…

2 hours ago

வோடபோன் வழங்குகிறது மேலும் புதிய சலுகை ரூ.396க்கு உங்களுக்கு கிடைக்கும் 96.6GB டேட்டா…!

தொடர்ந்து வோடபோன் நிறுவனம் சமீபத்தில் ரூ.1,499 விலையில் புதிய சலுகையை அறிவித்தது. பின் சில சலுகைகளை மாற்றியமைத்து பயனர்களுக்கு அதிகளவு பலன்களை வழங்கியது. இதைத்தொடர்ந்து வோடபோன் ரூ.396…

2 hours ago

ட்ராய் யின் அதிரடி அறிவிப்பு 100 DTH சேனல்களுக்கு மாதம் ரூ.153 கட்டணம் செலுத்த வேண்டும்

மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் கேபிள் மற்றும் DTH . சேவை கட்டணம் பற்றி புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி வாடிக்கையாளர்கள் 100 இலவச அல்லது…

2 hours ago

மாதம் 100 டிவி சேனல்கள் ரூ.153 கட்டனம் : டிராய்

இந்திய தொலைத் தொடர்பு ஒழங்குமுறை ஆனையம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் , விருப்பமான 100 டிவி சேனல்களை ரூ.153 கட்டணத்தில் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இந்த…

2 hours ago

Honor 10 Lite 24MP Ai செல்பி கேமராவுடன் அறிமுகம்

சிறப்பு செய்திHonor முதல் முறையாக டியூவ்ட்ராப் நோட்ச் உடன் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 2மாதங்களுக்கு முன்பே சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த போன் பிளிப்கார்டில் எக்ஸ்க்ளுசிவாக விற்பனை…

2 hours ago

பொங்கல் பிளான் தெறிக்கவிடும் பிஎஸ்என்எல்: ஏர்டெல்லுக்கு சாவல்.!

பிஎஸ்என்எல் நிறுவனம் பொங்கல் பிளான் போல் ரூ.798க்கு அறிவித்துள்ளது. இந்த ஆப்பர் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.மேலும், இது ஏரடெல் நிறுவனத்திற்கு கடும் போட்டியை ஏற்படும்…

2 hours ago