Categories: உலகம்

அமெரிக்காவுக்கு வடகொரியா மிரட்டல் விடுத்த நிலையில் கிம் – ஜி ஜின்பிங் சந்திப்பு

அமெரிக்காவுக்கு விடுத்த மிரட்டல்களுக்கு இடையே சீன அதிபர் ஜின்பிங் அழைப்பின் பேரில் கிம் ஜாங் உன் சீனா சென்றிருக்கிறார்.

வடகொரிய அதிபர் கிம் திங்கட்கிழமையன்று சீன புறப்பட்டு சென்றதாகவும் அவர் தற்போதுவரை சீனாவில்தான் இருக்கிறார் என்றும் சீன ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

கிம்மின் சீன பயணம் குறித்த வேறு எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

கடந்த வாரம் புத்தாண்டு உரையில் வடகொரிய அதிபர் கிம் ” உலக நாடுகளின் முன்னிலையில் எங்கள் நாட்டுக்கு அளித்த வாக்குறுதியை அமெரிக்கா ஒருவேளை செய்யத் தவறி எங்கள் மீது பொருளாதாரத் தடைகள் விதித்தால், நாங்கள் உங்களுக்கு அளித்த உறுதி மொழிகளைக் கைவிட்டு எங்கள் இறையாண்மையைப் பாதுகாப்ப புதிய வழிகளைத் தேர்ந்தெடுப்போம்” என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் சீனாவுக்கு கிம் பயணம் மேற் கொண்டிருக்கிறார்.

முன்னதாக, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, வடகொரியா 22 ஏவுகணை சோதனைகளை நடத்தியது. இதில் இரண்டு சோதனைகள் ஜப்பான் கடலுக்கு அருகில் நடத்தப்பட்டன. வடகொரியாவின் இந்த நடவடிக்கையை அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் கடுமையாக எதிர்த்து வந்தன.

ஆனால், எதிர்ப்புகளைச் சற்றும் பொருட்படுத்தாமல் வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்தது. இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா தலைமையில் வடகொரியாவின் மீது புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன.

எனினும் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளைப் பொருட்படுத்தாமல் வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்ததது.

இந்த நிலையில் தென்கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா பங்கேற்றது. அதுமுதல் வடகொரியா – தென் கொரியா உறவில் இணக்கம் காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து ட்ரம்ப் – கிம் இடையே சிங்கப்பூரில் சந்திப்பு ஏற்பட்டது.

இந்தச் சந்திப்பில் அணு ஆயுதங்களை அழிக்க வடகொரியா சம்மதம் தெரிவித்தது.எனினும் தொடர்ந்து அமெரிக்கா – வடகொரியா இடையே அணு ஆயுத சோதனைகள் தொடர்பான மோதல் நடந்து கொண்டுதான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

பள்ளி மாணவர்களுடன் தகாத உறவு வைத்த ஆசிரியை ‘போக்சோ’ சட்டத்தில் கைது

ஆரணி:ஆரணியை அடுத்த பையூர் காலனி பகுதியை சேர்ந்தவர் உமேஷ்குமார் (வயது 45), ஆசிரியர். இவரது மனைவி நித்யா (30). வேலூர் மாவட்டம் மாமண்டூர் அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக…

42 mins ago

குடியாத்தம் அருகே பிளாஸ்டிக் கிடங்கில் தீ விபத்து

குடியாத்தம்: குடியாத்தம் அருகே பழைய பிளாஸ்டிக் பொருள்கள் சேமித்து வைக்கும் கிடங்கில் ஏற்பட்ட திடீா் தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருள்கள் எரிந்து…

42 mins ago

கிளி ஜோசியத்தை நம்பி நான் அரசியல் செய்யவில்லை- ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

சென்னை:தமிழகத்தில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 9 தொகுதிகளும் புதுச்சேரி தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. தமிழ்நாடு…

42 mins ago

அ.தி.மு.க. சிறைக்கு செல்வதை தவிர்க்கவே பா.ஜ.க.வுடன் கூட்டணி- ஸ்டாலின் குற்றச்சாட்டு

அரூர்:அரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கிருஷ்ணகுமாருக்கு ஆதரவாக அரூரில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது, அமித்ஷாவிடம் அ.தி.மு.க.வை எடப்பாடி பழனிசாமி அடகு…

42 mins ago

ஈரோடு தொகுயில் உதய சூரியன் சின்னம்… பணிந்தது ம.தி.மு.க

திமுக கூட்டணியில் மதிமுக ஈரோடு தொகுதியில் போட்டியிடுகிறது. அந்த கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்ட அறிக்கையில் மதிமுக தனி சின்னத்தில் நிற்கும் என்று அறிவித்தார்.ஆனால்…

42 mins ago

திருப்பூர் தொகுதியில் 27-ந்தேதி பிரசாரத்தை தொடங்குகிறார் பிரேமலதா

சென்னை:அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள தே.மு.தி.க. 4 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தே.மு.தி.க. வேட்பாளர்களை ஆதரித்து கடந்த காலங்களில் விஜயகாந்த் தேர்தல் பிரசாரம் செய்தார். தற்போது உடல் நலம்…

42 mins ago