Categories: உலகம்

கனடாவிடம் தஞ்சம் கோரும் சவுதி இளம்பெண்!

சவுதியில் இருந்து தப்பி தாய்லாந்துக்கு வந்து, தன்னை திருப்பி அனுப்பக்கூடாது என சமூகவலைத்தளங்களில் கோரி பரபரப்பை ஏற்படுத்தியஇளம்பெண், கனடா நாட்டில் தற்போதுதஞ்சம்கோரியுள்ளார்.

சவுதியை சேர்ந்த 18 வயது இளம்பெண் ரஹப் முஹம்மது அல்-கனன். இவர் தனது குடும்பத்தினருடன், குவைத்துக்கு சுற்றுலா சென்றிருந்தபோது, அவர்களிடம் இருந்து தப்பி தாய்லாந்து வந்தடைந்தார். ஆஸ்திரேலியா செல்ல முயற்சித்த அவரை, தாய்லாந்து அதிகாரிகள் திருப்பிசவுதிக்கு அனுப்ப முயற்சித்தனர். ஆனால், தனக்கு திரும்பசெல்ல இஷ்டமில்லை என்றும், அனுப்பப்பட்டால், இஸ்லாமிய மதத்தை துறந்ததற்காக தனது பெற்றோர்கள் சித்தரவதை செய்வார்கள், என்றும் அவர் கோரினர்.
இதையடுத்து அவருக்கு நெட்டிசன்கள் மத்தியில்பெரும் ஆதரவு எழுந்தது. அவரை திருப்பி அனுப்ப மாட்டோம்,என தாய்லாந்து அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

இந்நிலையில், அவர் நிரந்தரமாக தங்கள் நாட்டில் தங்க முயற்சித்ததை தெரிந்துகொண்ட ஆஸ்திரேலியா அரசு, அவருக்கு வழங்கியிருந்த விசாவை ரத்து செய்தது. இந்த விவகாரத்தில், இளம்பெண்ணை சவுதிக்கு திருப்பி அனுப்பக்கூடாது என கனடா நாடு கடுமையாக வலியுறுத்தியதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில், தனக்கு கனடாதஞ்சம் அளிக்க வேண்டும் என அல்-கனன்தற்போது கோரியுள்ளார்.

newstm.in

Share

Recent Posts

பள்ளி மாணவர்களுடன் தகாத உறவு வைத்த ஆசிரியை ‘போக்சோ’ சட்டத்தில் கைது

ஆரணி:ஆரணியை அடுத்த பையூர் காலனி பகுதியை சேர்ந்தவர் உமேஷ்குமார் (வயது 45), ஆசிரியர். இவரது மனைவி நித்யா (30). வேலூர் மாவட்டம் மாமண்டூர் அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக…

23 mins ago

குடியாத்தம் அருகே பிளாஸ்டிக் கிடங்கில் தீ விபத்து

குடியாத்தம்: குடியாத்தம் அருகே பழைய பிளாஸ்டிக் பொருள்கள் சேமித்து வைக்கும் கிடங்கில் ஏற்பட்ட திடீா் தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருள்கள் எரிந்து…

23 mins ago

கிளி ஜோசியத்தை நம்பி நான் அரசியல் செய்யவில்லை- ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

சென்னை:தமிழகத்தில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 9 தொகுதிகளும் புதுச்சேரி தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. தமிழ்நாடு…

23 mins ago

அ.தி.மு.க. சிறைக்கு செல்வதை தவிர்க்கவே பா.ஜ.க.வுடன் கூட்டணி- ஸ்டாலின் குற்றச்சாட்டு

அரூர்:அரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கிருஷ்ணகுமாருக்கு ஆதரவாக அரூரில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது, அமித்ஷாவிடம் அ.தி.மு.க.வை எடப்பாடி பழனிசாமி அடகு…

23 mins ago

ஈரோடு தொகுயில் உதய சூரியன் சின்னம்… பணிந்தது ம.தி.மு.க

திமுக கூட்டணியில் மதிமுக ஈரோடு தொகுதியில் போட்டியிடுகிறது. அந்த கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்ட அறிக்கையில் மதிமுக தனி சின்னத்தில் நிற்கும் என்று அறிவித்தார்.ஆனால்…

23 mins ago

திருப்பூர் தொகுதியில் 27-ந்தேதி பிரசாரத்தை தொடங்குகிறார் பிரேமலதா

சென்னை:அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள தே.மு.தி.க. 4 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தே.மு.தி.க. வேட்பாளர்களை ஆதரித்து கடந்த காலங்களில் விஜயகாந்த் தேர்தல் பிரசாரம் செய்தார். தற்போது உடல் நலம்…

23 mins ago