Categories: Uncategorized

தெலுங்கானாவில் மீண்டும் “பழைய அம்பாசடர்” ஆட்சிதான்… எக்சிட் போல் முடிவுகள்

ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் இரண்டாவது முறையாக சந்திரசேகர் ராவின் தலைமையிலான தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

தெலுங்கானாவில் மொத்தம் உள்ள 119 இடங்களுக்கான தேர்தல் இன்று நடந்து முடிந்தது. 1821 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இந்த மாநிலத்தில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை ஊடகங்கள் இன்று மாலையில் இருந்து வெளியிட்டு வருகின்றன.

இந்தியா டிவி வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி 79 முதல் 91 இடங்கள் வரை பெறும் என்று கூறப்பட்டுள்ளது.
காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கூட்டணி 21 முதல் 33 இடங்களை வெல்ல வாய்ப்பு உள்ளதாக இந்தியா டிவி கணித்துள்ளது. பாஜக 1 முதல் 3 இடங்களை வெல்ல வாய்ப்பு உள்ளதாகவும், ஏஐஎம்ஐஎம் 4 முதல் 7 இடங்களை வெல்ல வாய்ப்பு உள்ளதாகவும் இந்தியா டிவியின் தேர்தலுக்கு பிந்தைய கணிப்பில் தெரியவந்துள்ளது,

டைம்ஸ் நவ்-சிஎன்எக்ஸ் டைம்ஸ் நவ்-சிஎன்எக்ஸ் கணிப்பு

டைம்ஸ் நவ்-சிஎன்எக்ஸ் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் ஆளும் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி 66 இடங்களை வெல்லும் என்றும், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 37 இடங்களை வெல்லும் என்றும் கணித்துள்ளது. பாஜக கூட்டணி 7 இடங்களில் வெல்லக்கூடும் என டைம்ஸ் நவ்வின் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

ரிபப்ளிக் டிவி ரிபப்ளிக் டிவி மற்றும் ஜன்கி பாத்

ரிபப்ளிக் டிவி மற்றும் ஜன்கி பாத் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி 50 முதல் 65 இடங்களையும், காங்கிரஸ் கூட்டணி 38 முதல் 52 இடங்களையும், பாஜக 4 முதல் 7 இடங்கள் வரையும் வெல்ல வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மற்ற கட்சிகள் 8 முதல் 14 இடங்கள் வெல்ல வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

நியூஸ் எக்ஸ் நியூஸ் எக்ஸ் கணிப்பு

நியூஸ் எக்ஸ் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு முடிவில், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி 57 இடங்களையும், காங்கிரஸ் கூட்டணி 46 இடங்களையும், பாஜக 6 இடங்களையும் மற்றவர்கள் 10 இடங்களையும் வெல்ல வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

source: oneindia.com

Share
Tags: oneindia

Recent Posts

தந்தை பெரியார் பணி முடிக்க தமிழர் தலைவர் அழைக்கிறார்!

தஞ்சைக்கு வாருங்கள் தோழர்களேதன்மான உணர்வுக்குத் தீனி கிட்டும்!பேரணியில் பங்கேற்பீர் தீரர்களே!பெரியாரின் பீரங்கி முழங்கிடுமே!தலைவர்கள் வருகிறார்கள், வருகிறார்கள்தரணிக்குச் சேதிகள் சொல்கிறார்கள்!கருத்தரங்கம் கேட்கவே வாருங்களேன்!கருஞ்சட்டைச் சேனையில் சேருங்களேன்!கலை நிகழ்ச்சி விருந்துக்குப்…

1 hour ago

பிரியாணி விற்றே சாதனை படைத்த கடை! அதுவும் இத்தனை லட்சம் பிரியாணியா?

பிரியாணி என்றாலே பெரும்பாலான நபர்களின் பிடித்த உணவாக மாறிவிட்டது. பலர் பிரியாணி சாப்பிடுவதற்காக பல கி.மீ தூரம் சென்று சுவையான பிரியாணியை சாப்பிடுவது வழக்கமாக கொண்டுள்ளனர். இப்படியாக…

1 hour ago

இந்தியாவின் முதுகில் குத்திய சீனா..? புல்வாமாவில் நடந்தது தீவிரவாதமே இல்லை எனச் சொல்லும் சீனா..?

புல்வாமாவில் நம் தேசத்தைக் காக்க போராடிய மத்திய ரிசர்வ் போலீஸார் 44 பேரின் ரத்தம் கூட இன்னும் ஒழுங்காக புல்வாமாவில் காயவில்லை. இந்த தேசத்தை காத்தவர்களின் உடல்களைக்…

1 hour ago

ஆவின் நிறுவனத்தில் வேலை.. விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 3

காஞ்சிபுரம் - திருவள்ளூர் மாவட்ட ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள மேலாளர் (பொறியாளர்) பணியிடங்களுக்கு, பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து மார்ச் 3 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக…

1 hour ago

இன்றைய (23.02.2019) பெட்ரோல், டீசல் விலை: உச்சகட்ட உயர்வு பொதுமக்கள் கடும் அதிர்ச்சி!

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை நிர்ணயித்து வந்தது. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை கைவிடப்பட்டு, நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை…

1 hour ago

திருமணத் தடையால் தவிக்கிறீர்களா? அதற்கு என்ன செய்யலாம்!

திருச்சி : திருமணத் தடைகளால் தவிப்பவர்களா நீங்கள். அப்போ நீங்க என்ன செய்யணும் தெரியுங்களா?பல ஆண்டுகளால் நீடித்து வரும் திருமணத் தடைகளால் இளைஞர்கள், இளம் பெண்கள் வேதனைப்படுகின்றனர்.…

1 hour ago