Categories: Uncategorized

சசிகலாவுக்கு டைம் சரியில்லை.. 2 நாள் வருமான வரி விசாரணைக்கு சிறை அனுமதி

சென்னை: வருகிற 13, 14 ஆகிய தேதிகளில் சிறையில் உள்ள சசிகலாவிடம் விசாரணை நடத்த வருமான வரித்துறைக்கு சிறை நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

கடந்த ஆண்டு, நவம்பர் மாதம் சசிகலா குடும்பத்தாருக்கு சொந்தமான 187 இடங்களில் கடந்த 5 நாட்களாக வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தினார்கள்.

இந்த ரெய்டில் வருமான வரித்துறையினர் வசம் ஏராளமான ஆவணங்கள், நகைகள், பணம், வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

எனவே சோதனையில் சிக்கிய பொருட்கள், ஆவணங்கள் குறித்து சசிகலாவிடம் விசாரணை நடத்த வருமான வரித்துறை, ஏற்கனவே சிறை அதிகாரிகளிடம் அனுமதி கேட்டிருந்தது. இது சம்பந்தமாக பரப்பரன அக்ரஹாரா சிறைக்கு கடிதமும் எழுதி இருந்தது.
ஆனால், அதற்கு சசிகலா மவுன விரதம் இருப்பதால் அனுமதி அளிக்க மறுத்துவிட்டது.

கடந்த வாரம் கடிதம் அனுமதி கடிதம்

அதற்கு பிறகு கடந்த வாரம் மீண்டும் சசிகலாவிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றும், அதற்கு வரும் 13, 14 தேதிகளில் விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் இன்னொரு கடிதம் வருமான வரித்துறை திரும்பவும் அனுமதி கேட்டார்கள். இந்த கடிதத்திற்கு தற்போது சிறை நிர்வாகம் பதில் அளித்துள்ளது.

2 நாட்கள் சிறை அதிகாரிகள்

அந்த கடிதத்தில், 13, 14 ஆகிய 2 நாட்களில் சசிகலாவிடம் விசாரணை நடத்தலாம் என்றும், அதே சமயம் 5 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த விசாரணையில் இடம்பெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனி அறை நேரடி விசாரணை

எனவே மேற்குறிப்பிட்ட தேதிகளில் அதிகாரிகள் சிறைக்கு சென்று சசிகலாவை ஒரு தனி அறையில் அமர வைத்து நேரடி விசாரணையில் இறங்குவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

source: oneindia.com

Share
Tags: oneindia

Recent Posts

தந்தை பெரியார் பணி முடிக்க தமிழர் தலைவர் அழைக்கிறார்!

தஞ்சைக்கு வாருங்கள் தோழர்களேதன்மான உணர்வுக்குத் தீனி கிட்டும்!பேரணியில் பங்கேற்பீர் தீரர்களே!பெரியாரின் பீரங்கி முழங்கிடுமே!தலைவர்கள் வருகிறார்கள், வருகிறார்கள்தரணிக்குச் சேதிகள் சொல்கிறார்கள்!கருத்தரங்கம் கேட்கவே வாருங்களேன்!கருஞ்சட்டைச் சேனையில் சேருங்களேன்!கலை நிகழ்ச்சி விருந்துக்குப்…

1 hour ago

பிரியாணி விற்றே சாதனை படைத்த கடை! அதுவும் இத்தனை லட்சம் பிரியாணியா?

பிரியாணி என்றாலே பெரும்பாலான நபர்களின் பிடித்த உணவாக மாறிவிட்டது. பலர் பிரியாணி சாப்பிடுவதற்காக பல கி.மீ தூரம் சென்று சுவையான பிரியாணியை சாப்பிடுவது வழக்கமாக கொண்டுள்ளனர். இப்படியாக…

1 hour ago

இந்தியாவின் முதுகில் குத்திய சீனா..? புல்வாமாவில் நடந்தது தீவிரவாதமே இல்லை எனச் சொல்லும் சீனா..?

புல்வாமாவில் நம் தேசத்தைக் காக்க போராடிய மத்திய ரிசர்வ் போலீஸார் 44 பேரின் ரத்தம் கூட இன்னும் ஒழுங்காக புல்வாமாவில் காயவில்லை. இந்த தேசத்தை காத்தவர்களின் உடல்களைக்…

1 hour ago

ஆவின் நிறுவனத்தில் வேலை.. விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 3

காஞ்சிபுரம் - திருவள்ளூர் மாவட்ட ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள மேலாளர் (பொறியாளர்) பணியிடங்களுக்கு, பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து மார்ச் 3 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக…

1 hour ago

இன்றைய (23.02.2019) பெட்ரோல், டீசல் விலை: உச்சகட்ட உயர்வு பொதுமக்கள் கடும் அதிர்ச்சி!

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை நிர்ணயித்து வந்தது. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை கைவிடப்பட்டு, நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை…

1 hour ago

திருமணத் தடையால் தவிக்கிறீர்களா? அதற்கு என்ன செய்யலாம்!

திருச்சி : திருமணத் தடைகளால் தவிப்பவர்களா நீங்கள். அப்போ நீங்க என்ன செய்யணும் தெரியுங்களா?பல ஆண்டுகளால் நீடித்து வரும் திருமணத் தடைகளால் இளைஞர்கள், இளம் பெண்கள் வேதனைப்படுகின்றனர்.…

1 hour ago