Categories: Uncategorized

கவிஞர்களுக்கு இனி கவலை பட தேவையில்லை – பூமிக்கு மேலும் 2 நிலவுகள் இருப்பதை உறுதி படுத்திய விஞ்ஞானிகள்

புதாபெஸ்ட்:

பூமிக்கு கூடுதல் நிலவுகள் இருப்பதாக பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள ஹங்கேரி நாட்டு விஞ்ஞானிகள், மேலும் 2 நிலவுகள் பூமிக்கு இருப்பதை உறுதி செய்துள்ளனர்.

அண்ட வெளியில் பூமியை போன்று பல்வேறு கோள்கள் இருப்பதும், அவற்றுக்கு துணை கோள்கள் இருப்பதும் நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். அவற்றை கண்டறியும் உச்சபட்ச இலக்குடன் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். அதன் ஒருபகுதியாக பூமிக்கு கூடுதல் நிலவுகள் இருப்பதாக கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த குழப்பம் நிலவி வருகிறது.

அந்த குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள ஹங்கேரி நாட்டு விஞ்ஞானிகள், பூமிக்கு கூடுதலாக 2 நிலவுகள் இருப்பதை ஆதாரத்துடன் நிரூபித்துள்ளனர்.

அந்த இரு நிலவுகளும் தூசுக்களால் ஆன மேகங்களை போல் காணப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். பூமியில் இருந்து நிலவு உள்ள தொலைவிலேயே இரு நிலவுகளும் இருப்பதாகவும் ஆனால் மங்கலான ஒளியை இவை உமிழ்வதால் கண்டறிவதில் சிக்கல் இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இவற்றை முதன் முதலில் கண்டறிந்த போலந்து ஆராய்ச்சியாளர் கோர்ட்லெவ்ஸ்கியின் பெயரே இந்த நிலவுகளுக்கு சூட்டப்பட்டுள்ளது. பொதுவாக கவிதை எழுதும் கவிஞர்களுக்கு முதலில் எளிமையாக கிடைக்கும் உவமையாக நிலவு இருந்துவரும் நிலையில், இனி ஒன்றுக்கு மூன்று நிலவுகள் இருப்பதால் உவமைக்கு பஞ்சம் இருக்காது என தெரிகிறது.

Share

Recent Posts

ஹிப்ஹாப் ஆதியின் நட்பே துணை படத்தின் ரிலீஸ் தேதி வெளியிட்ட படக்குழு

பார்த்திபன் தேசிங்கு இயக்கத்தில் ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் `நட்பே துணை'. ஹாக்கி விளையாட்டு மற்றும் நட்பை மையப்படுத்திய இந்த படத்தில் ஆதி ஜோடியாக…

2 hours ago

படப்பிடிப்பில் இயக்குனருடன் பிரபல நடிகை மோதல்

தமிழில் பாயும் புலி, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், ஆறாது சினம், சத்ரியன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா தத்தா. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் பிரபலமானார்.தற்போது…

2 hours ago

காஷ்மீரில் அத்துமீறி பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி

ஜம்மு:ஜம்மு மற்றும் காஷ்மீரில் கடந்த பிப்ரவரி மாதம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 துணை ராணுவ படையினர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு சென்று தீவிரவாத முகாம்கள்…

2 hours ago

கன்னியாகுமரி தொகுதியில் கோடீஸ்வர வேட்பாளர்களுக்கு இடையே போட்டியா?

கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ், பாஜக மற்றும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களின் சொத்து பட்டியல் அடிப்படையில் பார்த்தால் அங்கு கோடீஸ்வர வேட்பாளர்களுக்கு இடையிலான போட்டி போல் காட்சியளிக்கிறது.17-ஆவது…

2 hours ago

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும்; அமைச்சர் அருண் ஜெட்லி உறுதி!

2019-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் மாற்றத்தை கொண்டுவருபவர் மோடி தான் எனவும், வரும் தேர்தலில் பாஜக வெற்றிப் பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என மத்திய நிதி…

2 hours ago

Exclusive Interview: மோடி அலை குறித்து மே 23 அன்று தெரியும் -அருண் ஜேட்லி

மத்திய அமைச்சர் நிதி மந்திரி அருண் ஜெட்லியிடம் ஜி நியூஸ் பத்திரிகை தலைமை ஆசிரியர் சுதிர் சௌத்ரி நேர்காணலை மேற்க்கொண்டார். அப்பொழுது அவர் வரும் மக்களவை தேர்தலைக்…

2 hours ago