Categories: Uncategorized

சிறையில் அடைக்கப்பட்டார் முன்னாள் பிரதமர்.!

கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வங்காளதேசம் நாட்டில் நடந்த போராட்டத்தின்போது பஸ் மீது வெடிகுண்டுகளை வீசி நடத்தப்பட்ட தாக்குதலில் 8 பேர் பலியாகினர். இந்த வழக்கில் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.ஏற்கனவே ஐந்தாண்டுகள் ஊழல் வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட கலிதா ஜியாவுக்கு இந்த கொலை வழக்கில் விசாரணை நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. இந்த ஜாமினுக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, டாக்கா நகரில் இருக்கும் பிரிட்டிஷ் காலத்து தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கலிதா ஜியாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருப்பதாக அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

அவரை ஆஸ்பத்திரியில் அனுமதித்து உரிய சிகிச்சை வழங்கவேண்டும் என்று டாக்கா உயர்நீதிமன்றத்தில் ‘ரிட்’ மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அவருடைய உடல்நிலையை பரிசோதிக்க 5 மருத்துவர்கள் கொண்ட குழுவை நியமித்தது. அடிக்கடி கால் மற்றும் கை மரத்துப்போகும் நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் கலிதா ஜியாவை டாக்காவில் இருக்கும் பங்கபந்து ஷேக் முஜிப் மருத்துவ பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை வழங்குமாறு கடந்த 4-10-2018 அன்று கோர்ட் உத்தரவிட்டது.

இதையடுத்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிறையில் இருந்து கொண்டு செல்லப்பட்ட கலிதா ஜியா (73), ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இந்நிலையில், ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட கலிதா ஜியா இன்று மீண்டும் டாக்கா சிறைக்கு திரும்பினார்.

இது சம்மந்தமாக மருத்துவர்கள் கூறுகையில், கலிதா ஜியாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவர் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவித்தனர்.

Share

Recent Posts

ஜப்பானில் மக்கள் கூட்டத்துக்குள் கார் புகுந்ததில் 2 வயது குழந்தையுடன் இளம் பெண் பலி

டோக்கியோ :ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள இகேபுகுரோ மாவட்டத்தில் சுரங்கப்பாதை ரெயில் நிலையம் ஒன்று உள்ளது. இந்த ரெயில் நிலையம் அமைந்துள்ள சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும்.இந்த…

9 hours ago

இந்தியாவில் மின் உற்பத்திக்காக 12 புதிய அணுஉலைகள் நிறுவ திட்டம்- வெளியான தகவல்

மாஸ்கோ:ரஷியாவில் உள்ள கோச்சி என்ற நகரில் அண்மையில் 11-வது சர்வதேச அணுசக்தித்துறை கண்காட்சி நடைபெற்றது. 'ரொசாட்டம்' என்ற அமைப்பின் ஆதரவுடன் நடந்த இந்த கண்காட்சியில் 74 நாடுகளை…

9 hours ago

அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற இந்தியர்கள் 2 பேர் கைது

நியூயார்க்:அமெரிக்காவிற்குள் ஆட்கடத்தல் கும்பல் மூலம் சட்டவிரோதமாக ஊடுருவ முயன்று, பாலைவனப் பகுதியில் வழிதெரியாமல் சிக்கித் தவிக்கும் அகதிகளை மீட்பதற்காக மெக்சிகோ எல்லைப்பகுதியில் சூரிய மின்சக்தி மூலம் இயங்கும்…

9 hours ago

12 குழந்தைகளை வீட்டில் அடைத்து கொடுமைபடுத்திய தம்பதிக்கு ஆயுள்தண்டனை

கலிபோர்னியா:அமெரிக்கவின் கலிபோர்னியாவை சேர்ந்தவர் டேவிட் ஆலன் டர்பின் (வயது57). இவரது மனைவி லூயிஸ் அன்னா டர்பின் (50). இவர்களுக்கு 12 குழந்தைகள் உள்ளனர். குழந்தைகள் பிறந்ததில் இருந்து…

9 hours ago

எகிப்து அதிபரின் பதவிக்காலம் ஆறாண்டுகளாக நீட்டிப்பு

கெய்ரோ:எகிப்து நாட்டின் அதிபராக அப்டெல் பட்டா சிசி பதவி வகித்து வருகிறார். தற்போதைய நிலவரப்படி அதிபரின் பதவிக்காலம் நான்காண்டுகளாக உள்ள நிலையில், மேலும் இரண்டாண்டுகள் அதிகரித்து அதிபரின்…

9 hours ago

கனடாவில் பனிச்சரிவில் சிக்கி வீரர்கள் 3 பேர் பலி

ஒட்டாவா:கனடாவின் அல்பெர்டா மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணங்களுக்கு இடையே ஹவ்ஸ் பீக் என்கிற மலை உள்ளது. இது அந்நாட்டின் மிக உயரமான மலைகளில் ஒன்றாகும். இந்த நிலையில்,…

9 hours ago